குறிப்பிட்ட தொழில் மட்டும் இன்றி அனைத்து துறைகளிலும் பிரதானமான நகரமாக இருந்து வருகிறது சென்னை. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு குடிப்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மாணவர்கள் தொடங்கி வேலை பார்ப்பவர்கள் என ஒவ்வொருவரும் தன் கனவை நிறைவு கொள்வதற்காக சென்னையைத் தேடி ஆண்டதோறும் வந்து கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் எதையும் தாங்கும் இதயம் என்று போல் சென்னையும் ஒவ்வொரு ஆண்டும் கூட்டு கூட்டாக குவியும் மக்களை தாராளமாக கையை விரித்து அணைத்துக் கொள்கிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

நாலடி இருக்கும் இடத்தில் 100 பேர் தங்கம் சூழலை உருவாக்கி வருகிறது என்றே சொல்லலாம். இதனால் விலை மானியங்கள், பொருட்களின் தேவைகள் என அனைத்தும் உயர்ந்து கொண்டே செல்கிறது. முக்கியமாக இதனால் நகரின் பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. மக்கள் வருவதையும் தடுக்க முடியாது அதே சமயத்தில் மக்களின் அத்தியாவசியத்தையும் நிறைவேற்றாமல் இருக்க முடியாது என கருதி வளர்ச்சி திட்டத்தில் ஒன்றான மெட்ரோ திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் பயணிகள் போக்குவரத்து நெரிசல் இன்றி தப்பிக்க ஒரு பெரும் உதவியாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: உலகின் தொழிற்சாலையாக முன்னேறி வரும் இந்தியா - பிரதமர் மோடி பெருமிதம்

முன்னதாக 2015 ஆம் ஆண்டு சென்னையில் மெட்ரோ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதன் பயனாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவானதாகவே இருந்தது. ஆனால் அதன் பயனும் அதன் சிறப்பு அம்சங்களும் நாளடைவில் மக்களை தன்வசப்படுத்தியது. குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு செல்ல தவித்த மக்கள் மெட்ரோ திட்டத்தினால் அதனை எளிதாக விரைவேற்ற முடிந்தது. இதனால் மெட்ரோவின் பயனாளர்கள் மல மலவென அடுத்தடுத்த ஆண்டுகளில் கணிசமான உயர்வை கண்டது. அந்த வகையில் மெட்ரோ திட்டம் தொடங்கியது முதல் இன்று வரையில் ஒவ்வொரு மாதமும் மெட்ரோவின் பயனாளர்களின் எண்ணிக்கையை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது வெளியிட்ட அறிக்கையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணளிகளுக்கும் போக்குவரத்து வசதி அளித்து வருவதோடு நண்பகத்தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருவதாக பெருமிதம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சுமார் 86 லட்சத்து 65 ஆயிரத்து 803 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடப்பாண்ட ஜனவரி மாதத்தில் 86 லட்சத்து 999344 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

என்னதான் ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் பிப்ரவரி மாதம் ஒரு சில பயணிகளுடன் குறைவானதை கொண்டிருந்தாலும் முந்தைய மாதத்திற்கு ஈடாக பயணிகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில், குறிப்பாக 07.02.2025 அன்று ஒரே நாளில் 3 லட்சத்து 56 ஆயிரத்து 300 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தற்போது மெட்ரோ பணிகள் விரிவடைந்து வரும் நிலையில், சென்னையில் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று உறுதி அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மார்ச் 31க்குப்பின் டெல்லியில் வாகனங்களுக்கு பெட்ரோல் விற்பனை இல்லையாம்! ஏன் தெரியுமா?