சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் மக்களும் வந்து செல்கின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களில் மக்களின் கூட்டம் அலைமோதும். இவ்வாறு பெசன்ட் நகர் கடற்கரையில் குவியும் மக்களை கவரும் வகையில் ஏராளமான சிற்றுண்டி கடைகளும், கடல் சார்ந்த உணவு கடைகள் அங்கு செயல்படுகிறது.

இந்நிலையில் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பிரேம்குமார் மற்றும் ராஜேஸ்வரி தம்பதி, தனது இரு குழந்தைகளுடன் நேற்று இரவு பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளனர். குழந்தைகளுடன் கடற்கரையில் விளையாடிவிட்டு, அங்கு செயல்பட்டு வரும் ராயல் சி ஃபுட்ஸ் ( royal sea foods) என்ற கடையில் 600 ரூபாய்க்கு ஆசை ஆசையாய் மீன் ஒன்றை வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஓசியில குல்ஃபி ஐஸ் தரமாட்டியா? வடமாநில சிறுவனை தாக்கிய ரவுடிகள்.. பித்தளை மணியால் தலையில் தாக்கி அராஜகம்!

பாதிக்கு மேல் மீனை சாப்பிட்ட பின்னர் மீனின் வயிற்றுப் பகுதியில் ஏராளமான புழுக்கள் இருப்பதைக் கண்ட பிரேம்குமார் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கடை உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் உரிமையாளரோ அலட்சியமாக பதில் அளிக்க கோபமடைந்த பிரேம்குமார், அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் அங்கு விரைந்த போலீசார் சம்பந்தப்பட்ட உணவகத்தில் உணவுக்காக காத்துக் கொண்டிருந்த மற்ற வாடிக்கையாளர்களை வெளியேற்றி கடையை உடனடியாக அடைத்தனர்.


மேலும் இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள பெசன்ட் நகர் காவல் துறையினர் உணவு பாதுகாப்பு துறைக்கும் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வாயை பொத்தி பாலியல் தொல்லை.. இருட்டில் அலறிய பெண் போலீஸ்.! கொடூரன் அதிர்ச்சி செயல்..!