வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் இணைந்தது போல் விடுமுறை தினங்கள் அமைந்தால் தென்மாவட்டங்களுக்கு அதிக அளவில் பயணிகள் படையெடுப்பது வழக்கம்.

அந்தவகையில் குடியரசு தினம் வருகிற 26-ந் தேதி ஞாயிறன்று வருவதால் இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கும் சேர்த்து சொந்த ஊர் செல்ல பலர் திட்டமிடுவர்.
இதையும் படிங்க: சென்னையில் விரைவில் தனியார் பேருந்து சேவை?...

அப்படிப்பட்டவர்களுக்காக சிறப்பு ரயில் ஒன்றை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இடையே இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அந்தவகையில் தடம் எண் 06053 என்கிற ரயில் இன்று இரவு 10.40 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும். தாம்பரம், விழுப்புரம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, கொடைக்கானல் ரோடு, மதுரை, சாத்தூர், வாஞ்சி மணியாச்சி, நெல்லை வழியாக குமரியை நாளை மதியம் 12 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கமாக தடம் எண் 06054 என்கிற ரயில் கன்னியாகுமரியில் இருந்து 26-ந் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு 27-ந் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விடுமுறைக்கு அவசரமாக பயணிப்பவர்கள் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிங்க: கோயம்பேட்டில் ஒரு டைடல் பார்க்.. தமிழக அரசின் அசத்தல் ப்ளான்...