இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் நேற்று மாரடைப்பால் காலமானார். மனோஜ் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்ததுடன் இயக்குநராகவும் அவரதாரம் எடுத்தார்.

பாரதிராஜா தனது மகனை கடந்த 1999-ம் ஆண்டு அவரது இயக்கத்தில் உருவான தாஜ்மஹால் படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தினார். பிறகு கடல்பூக்கள், சமுத்திரம், அன்னக்கொடி, பேபி, ஈரநிலம், அல்லி அர்ஜூனா, ஈஸ்வரன், மாநாடு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: எனக்காக இதை செய்யுங்க விஜய்! மரணப்படுக்கையில் கோரிக்கை வைத்த ஷிகான் ஹூசைனி!

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிம்ஸ் மருத்துவமனையில் மனோஜ் பாரதிராஜாவிற்கு ஓப்பன் ஹார்ட் sஅறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதன் பிறகு, வீட்டில் இருந்தவாறு சிகிச்சை எடுத்து கொண்டு ஓய்வில் இருந்துள்ளார். இந்த நிலையில் நடிகர் மனோஜ் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து மனோஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், நடிகர் கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மனோஜ் மறைவுக்கு பிரேமலதா விஜயகாந்த், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஜி.கே.வாசன், சசிகலா உள்ளிட்ட பல அரசியல் கட்சித்தலைவர்களும், ஆர்.வி.உதயகுமார், பாடலாசிரியர் சினேகன், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் சூரி, சரத்குமார், நாசர், டி.ராஜேந்தர் உள்ளிட்ட சினிமாத்துறை பிரபலங்களும், இயக்குநர் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா வீட்டில் வைக்கப்பட்டுள்ள மனோஜ் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய், உயிரிழந்த மனோஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, பிரபு உள்ளிட்டோர் மனோஜ் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், இயக்குனர்கள் தியாகராஜன், பேரரசு, நடிகர்பார்த்திபன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் கண்ணீர் மல்க மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இன்று மாலை 3 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் மனோஜ் உடல், பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: ஒரு வழியா சொல்லிட்டாரு பா..! திமுகவை நேரடியா அட்டாக் செய்த விஜய்..!