''விஜய் இன்னும் வெளியே வரவில்லை என்பது அவரது ரசிகையாக எனக்குமே ஏமாற்றமாக இருக்கும்போது வாக்காளப் பெருமக்களுக்கு கண்டிப்பாக பெரும் ஏமாற்றமாக இருக்கும்'' என நடிகை கஸ்தூரி கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், ''தமிழக வெற்றி கழகம் என்பது விஜய் அவர்களுடைய கட்சி. விஜய்க்காகத் தான் அங்கே எல்லோரும் அவர் பின்னால் வருகிறார்கள். ஆதரவாளர்கள், வாக்காளர்கள், முதல் தலைமுறை இளைஞர்கள் எல்லாரும் விஜய்க்காகத்தான் வருகிறார்கள் .
இதையும் படிங்க: விஜய்க்கு என்னைப்போல ஒரு அடையாளம் இருக்கிறதா..? அவர் ஒரு 'ஜீரோ'..! ஆ.ராசா ஆவேசம்..!

அங்கு இருக்கக்கூடிய பிரசாந்த் கிஷோருக்காகவோ, புஸ்ஸி ஆனந்துக்காகவோ, கட்சியில் இருக்கக்கூடிய பிற நபர்களுக்காகவோ அவர்கள் வரவில்லை. அவர்களெல்லாம் பெரிய தலைவர்கள்தான். ஆனால் அவர்களுக்காக யாரும் வரவில்லை. அவர்கள் எவ்வளவு நல்லா பேசினாலும், அவர்கள் இந்த ஒரு வருடத்திற்குள் அவர்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்தி அடுத்த கட்ட தலைவராக தங்களை முன்னிறுத்த நினைப்பதுதான் பேக் ப்ஃயர் ஆகிறது. இது எனது தாழ்மையான அபிப்ராயம். இதனால் நான் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை . ஆனால் விஜய் தான் கட்சியினுடைய முகம், அடையாளம், ஈர்ப்பு சக்தி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

அதை கெடுப்பது போல் இருக்கும் இருக்கும் இரண்டாம் கட்டத்த தலைவர்களால் தவெகவுக்கு பின்னடைவுதான். அது சரியாக ஒர்க்அவுட் ஆகவில்லை. இரண்டாவது தமிழகத்தில் இன்று முக்கியமாக மக்கள் பிரச்சினைகளை விஜய் கொஞ்சம் மென்மையாகக் கையாளுகிறார். எல்லாத்துக்கும் அறிக்கை மட்டும் கொடுக்கிறார். அம்பேத்கர் சிலைக்கு மாலை போடுவதற்கு கூட ஈசிஆரில் இருக்கக்கூடிய சிலைக்குத் தான் சென்று மாலை போடுகிறார். மக்களை அவர் சந்திக்க வேண்டும். அது கட்டாயம். அதை இன்னும் எவ்வளவு நாள் தள்ளிப் போடப் போகிறார் என்று தெரியவில்லை.

மற்றவர்கள் எல்லாம் தேர்தலுக்கான வேலையை ஆரம்பித்து விட்டார்கள். திமுகவை பொருத்தவரை வேற லெவல் வேலையை ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக ஆவேசமாக, ஆபாசமாக பேசியதாவது தினமும் ட்ரெண்டிங் ஆகி ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். மற்ற கட்சிகளும் தேர்தல் வேலைகளை அறிவித்து விட்டனர். இவர் இன்னும் வெளியே வரவில்லை என்பது விஜய் ரசிகையாக எனக்குமே ஏமாற்றமாக இருக்கும் போது வாக்காளப் பெருமக்களுக்கு கண்டிப்பாக பெருமை ஏமாற்றமாகத்தன் இருக்கும்'' என எச்சரித்துள்ளார் நடிகை கஸ்தூரி.
இதையும் படிங்க: வக்ஃபு வழக்கு: ஆணியே புடுங்காமல் 'க்ரெடிட்' திருடும் விஜய்- ஆதவ்..? பகீர் குற்றச்சாட்டு