அதானி இந்தியாவில் மட்டும் சர்ச்சையாகவில்லை... உலகம் முழுவதும் அவர் வியாபித்து இருக்கிறார். ஆளானப்பட்ட அமெரிக்காவிலேயே பிரயளப்பட்ட அவருக்கு கென்யா எல்லாம் எம்மாத்திரம்? குட்டி நாடு.. வறுமை கொண்ட நாடு என அதானி லேசாக எடைபோட்டிருப்பார். ஆனால், அங்கே அவருக்கு எதிராகக் கிளம்பிய ஒரு பொடியன் ஆப்பு வைத்திருக்கிறான்.
கென்யாவின் மிகப்பெரிய விமான நிலையத்தை கையகப்படுத்துவது தொடர்பான சர்ச்சை அதிகரித்து வருகிறது. இந்த விமான நிலையத்தின் செயல்பாடுகள், நிர்வாகத்தை இந்திய நிறுவனமான அதானி குழுமத்திற்கு வழங்க வேண்டும். ஆனால், தற்போது போராட்டங்கள் அதிகரித்து வருவதால் அது நடக்காது எனத் தெரிகிறது.
இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக முதலில் குரல் எழுப்பியவர் கென்யாவைச் சேர்ந்த வணிக மாணவர் நெல்சன் அமென்யா. இப்போது கென்யா மக்கள் இந்த மாணவனை ஹீரோவாகக் கொண்டாடுகிறார்கள். நெல்சன் அமென்யா தனியார் நிறுவனங்களுடன் கென்ய அரசிடம் செய்யும் ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: அம்பேத்கரை மையம் கொண்ட பாஜக- காங்கிரஸ் அரசியல்... அபகரிப்பால் குமுறும் தலித் கட்சிகள்... பின்னணி என்ன?
பிரான்ஸில் எம்பிஏ படித்து வரும் 30 வயதான அமென்யா, ஊழலுக்கு எதிரான போராளியாக கென்யாவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். கென்யாவுக்கும், அதானி குழுமத்துக்கும் இடையே முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் குறித்த தகவலை அவர் ஜூலை மாதம் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இது நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்துடன் தொடர்புடையது.
இதுகுறித்து பேசிய அமென்யா, "இந்த ஆவணங்களை என்னிடம் கொடுத்தபோது, இது மற்றொரு அரசின் ஒப்பந்தம் என்றுதான் நான் நினைத்தேன். அதன் தீவிரம், அளவு பற்றி எனக்கு தெரியாது" என்று தெரிவித்தார். அந்த விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட அதானி குழுமம் 2 பில்லியன் டாலர் (1.6 பில்லியன் பவுண்டுகள்) கொடுத்து வாங்க முன் வந்ததை அந்த ஆவணங்களில் பதிவாகி உள்ளன.
அந்த தொகையில் விமான நிலையத்தை நவீனமயமாக்கி இயக்க முடியும். அமென்யா அந்த ஆவணங்களை படிக்கத் தொடங்கியபோது, இந்த ஒப்ப்ந்தம் முடிந்தால் அது கென்யாவின் பொருளாதாரத்தை நாசப்படுத்தும் என்பதை புரிந்து கொண்டார். அந்த லாபம் அனைத்தும் இந்தியாவின் அதானி குழுமத்திற்கு செல்லும்.
அந்த ஒப்பந்தம் நியாயமற்றது என்பதை உணர்ந்தார். ‘‘இந்த ஆவணங்கள் உண்மையானவை என்று நான் நினைப்பதற்கு நல்ல காரணம் இருந்தது. இந்த ஆவணங்களை எனக்கு வழங்கியவர்கள் அரசின் மிகவும் சட்டபூர்வமான துறைகளைச் சேர்ந்தவர்கள்" என்று தெளிவி படுத்திக் கொண்டார். அதானி குழுமம் இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உலகளவில் செயல்படுகிறது. இந்தியாவின் ஒரு பெரிய தொழிலதிபர், பிரான்ஸ், தான்சானியா, ஆஸ்திரேலியா மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில் உள்கட்டமைப்பு, சுரங்கம் மற்றும் எரிசக்தி திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.
கென்யாவுடனான அதானி ஒப்பந்தம் தனது முதலீட்டை திரும்பப் பெறவில்லை என்றால், அந்நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் என்பதற்கான ஆவணங்கள் கிடைத்ததாக அமென்யா உணர்ந்து கொண்டார். "இது ஜனாதிபதி, கென்யா விமான நிலையங்கள் ஆணையம், அமைச்சர் ஆகியவற்றின் தலைமையால் மக்களின் நம்பிக்கையை முற்றிலும் மீறுவதாகும். அவர்கள் அனைவரும் மக்களுக்கு துரோகம் செய்ய முயன்றுள்ளனர்" என்று அமென்யா குற்றம் சாட்டினார்.
அவரது கைகளில் ஆதாரங்கள் இருந்தபோதிலும், அமென்யா அடுத்து என்ன செய்வது என்று திணறினார். கென்யாவில் இருப்பதை விட பிரான்சில் இருப்பது சிறந்தது என்றாலும், ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்கள் குறிவைக்கப்பட்டு சிலர் கொல்லப்பட்டாலும், அவரது சொந்த பாதுகாப்பு ஆபத்தில் இருந்தது.
"கொஞ்சம் பயந்துட்டேன். என்ன நடக்குமோன்னு தெரியல. நான் என் கேரியரை பணயம் வைக்கிறேன். என் உயிரை பணயம் வைக்கிறேன். இதில் ஏன் ரிஸ்க் எடுக்கணும்? என்று நினைத்த அவர், ஒரு கட்டத்தில் அமைதியாக இருப்பது நியாயமல்ல என்று உறுதி பூண்டார். தனக்கு அனுப்பப்பட்ட அனைத்து ஆவணங்களையும் படித்து விட்டு பல வாரங்கள் கழித்து, அமென்யா ஜூலை மாதம் தனது எக்ஸ் பக்கத்தில் அந்த ஆவணங்களை கசியவிட்டார். கென்யாவில் அது உடனடி சீற்றத்தைத் தூண்டியது.
அந்த விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதானி குழும ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினர். இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. வேறு வழியே இன்றி அதானி குழுமத்துடனான ஒப்பந்தத்தை கென்ய அரசு ரத்து செய்தது.
இதையும் படிங்க: கட்சி தொடங்கியதையே மறந்து போனாரா விஜய்..? எதிரணிகள் கலாய்ப்பு... தவெக சிலாகிப்பு..!