எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது தொடர்பான சர்ச்சைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
அத்திக்கடவு அவினாசி திட்டம் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமியால் செயல் வடிவம் பெற்றது. இத்திட்டத்திற்கான 80 சதவீத பணிகள் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்திலேயே நிறைவுற்றது. மீதம் இருந்த 20 சதவீத பணிகளையும் திமுக அரசு, அதிமுகவிற்கு நற்பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காகவே மூன்று வருடங்கள் கிளப்பில் போட்டு ஆமை வேகத்தில் நடைமுறைப்படுத்தியது. எனவே இத்திட்டம் வெற்றி பெற எடப்பாடி பழனிச்சாமி முக்கியமானவர்கள் என்றார்.
இதையும் படிங்க: அதிமுகவில் எடப்பாடியாருக்கு எதிராக போர்க்கொடி..!அதிருப்தியில் செங்கோட்டையன்: ஆதரவாக களமிறங்கிய டிடிவி.தினகரன்..!
தொடர்ந்து பேசிய அவர், "கடவுள் அவிநாசி திட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இந்த பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விவசாயிகள் கூட்டமைப்பின் அனைத்து கட்சியை சேர்ந்த விவசாயிகளும் உள்ளனர். 50 ஆண்டுகால கனவு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சிறை சென்றவர்கள், போராடியவர்கள், என்ன விரதம் இருந்தவர்கள் என பல கட்சியை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். எனவேதான் இந்த பாராட்டு விழா அரசியல் கலப்பு இருக்கக் கூடாது முழுக்க முழுக்க விவசாயிகளால் ஏற்பாடு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியை அதிமுக நிற்பது செய்யவில்லை, விவசாயிகள் ஏற்பாடு செய்துள்ளனர்விவசாயிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அதனால்தான் அரசியல் கலப்பு இருக்கக் கூடாது என்பதற்காக எம்ஜிஆர் ஜெயலலிதா புகைப்படங்கள் இடம் பெறவில்லை. தனக்கு மரியாதை தரவில்லை என கோகில இந்திரா பொது இடத்தில் பேசவில்லை. உள்
அரங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார். அது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர்- ஜெயலலிதாவை புறக்கணித்துவிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவமா..? போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன்..!