சட்டமன்ற தேர்தல் வர இன்னும் ஓராண்டுகளே உள்ள நிலையில், அதிமுகவில் உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமை மீது முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் கடும் அதிருப்தியில் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி வருகிறது. இதனிடையே அதிமுக முக்கிய நிர்வாகியான கோகுல இந்திரா கட்சிக்கூட்டத்தில் மனம் நொந்து பேசிய வார்த்தைகள் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதாக அமைந்தது.

சமீபத்தில் சென்னை அண்ணா நகரில் அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், கோகுல இந்திரா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அதிமுகவில் ஒற்றுமை இல்லை. எனக்காக இல்லை... என் செல்வாக்குக்காக இல்லை. பொதுச்செயலாளர் அறிவித்த ஆர்ப்பாட்டம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக. அதுதான் நோக்கமே தவிர, எல்லாரையும் தான் கூப்பிட்டோம். அதனால என்னை பார்த்து பேசுறதுக்கோ, என்னை பார்த்து கும்பிடறதுக்கோ, என்னை பார்த்து பயப்படறதுக்கோ. யாருக்கும் அச்சம் வேண்டாம். யாருக்கும் எந்த நிர்பந்தமும் வேண்டாம். என் படத்தை போஸ்டரில் போட்டால் சந்தேஷமா இருக்காதா? என கொந்தளிந்தார்.
இதையும் படிங்க: ஒன்றுபட்டால் வாழ்வு... இல்லையென்றால் தாழ்வு... எடப்பாடியை எச்சரித்த ஒபிஎஸ் ...!

செங்கோட்டையனுக்கு அடுத்தப்படியாக கட்சி கூட்டத்திலேயே கோகுல இந்திரா பேசியது ஓ.பன்னீர்செல்வம், தினகரன் உள்ளிட்டோரின் கவனத்தை ஈர்த்தது. அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளதாகவும், ஒவ்வொருவராக எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ளனர் என்றெல்லாம் விவாதங்கள் எழுந்தன. குறிப்பாக ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல்... அதிமுகவில் அடுத்தடுத்து வெடித்த சர்ச்சைகளால் ஓபிஎஸ் டீம் மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்ததாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கோகுலா இந்திரா செயல்பட்டுள்ள வீடியோவை சோசியல் மீடியாவில் அதிமுகவினர் வேக, வேகமாக ஷேர் செய்து வருகின்றனர். சமீபத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ள கோகுலா இந்திரா சிரித்த முகத்துடன் வந்து எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு விநியோகித்துக் கொண்டிருக்கும் லட்டை கையில் வாங்கிக்கொள்கிறார். இந்த வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்து வரும் அதிமுகவினர் ஓபிஎஸ் டீம் ஆசையில் கோகுலா இந்திரா மண்ணை வாரி போட்டுவிட்டார் என கொண்டாட்டத்துடன் குறிப்பிட்டு வருகின்றனர்.
அதிமுக அலுவலகத்தில் கோகுல இந்திரா ❤️
உட்கட்சி பூசலா ? - ஓ.டயருக்கு எச்சரிக்கை
மகிழ்ச்சியோடு விழாவில் பங்கேற்பு
எடப்பாடியார் கிட்ட லட்டு வாங்கிட்டு, டயர் கும்பலுக்கு அல்வா கொடுத்த கோகுல இந்திரா 🔥😎#ADMK_TNJ@AIADMKITWINGOFL @satyenaiadmk @EPSTamilNadu @arivoli384058 pic.twitter.com/w1T3Oe7TQh
— ஆதித்திய கரிகாலன் அஇஅதிமுக -Say No To Drugs & DMK (@AthithyaKarika4) February 10, 2025
இதையும் படிங்க: எடப்பாடியாரின் மனமாற்றம்... உள் கூட்டணி அரசியலில் டி.டி.வி. - ஓ.பி.எஸ்..! அதிமுகவில் புதிய வியூகம்..!