எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை ஏற்பதாக சசிகலா தயாராக இருப்பதாக அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான, வைகை செல்வன் பேசியிருப்பது அதிமுகவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அதிமுகவை பொறுத்தவரைக்கும் ஒருங்கிணைப்பு பணிகள் என்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. திமுகவை வீழ்த்த ஒருங்கிணைந்த அதிமுகவால் தான் முடியும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிடிவி தினகரன், வி.கே.சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது வி.கே.சசிகலாவை விமர்சித்து வந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தற்பொழுது அவரை ஏற்க தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடல் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிமுகவினுடைய முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பரபரப்பு கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். கூட்டத்தில் பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவை ஏற்றுக்கொள்ள சசிகலா தயாராக இருக்கிறார். அதனால் தான் திமுகா அரசை அவர் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் எடப்பாடியார் தலைமையை சசிகலா ஏற்றுக்கொண்டு அவர் வழியில் நடக்க தயாராக உள்ளார். எடப்பாடியார் தலைமையில் அடுத்த ஆட்சி அமைய வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார் என பேசியுள்ளார். பெண்கள் எல்லாம் பாதுகாப்பாக உள்ளார்களா? சசிகலா அம்மா என அங்கிருந்த பெண்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏக்கள் கேட்டது என்ன..? தமிழக அமைச்சர்கள் கூறியது என்ன..?

ஜூன் மாதத்திற்குள்ளாக ஒரு ஒருங்கிணைந்த அதிமுக உருவாகும் என ஓ பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் தெரிவித்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது, முன்னாள் அமைச்சர் வைகை செல்வனுடைய இந்த பேச்சு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதிமுகவை பொறுத்தவரைக்கும் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஓ.பன்னீர் செல்வம் சசிகலா ஆகியோரை விமர்சனம் செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே அந்த விமர்சனங்களை தவிர்த்து வருகிறார்கள் என்பது கூடுதல் கவனம் பெறுகிறது.

அந்த வகையில் சசிகலாவின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை புறம் தள்ளி தற்பொழுது உத்திரமேரூரில் நடைபெற்ற அந்த பூட்ஸ் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் வைகை செல்வன் பேசி இருப்பது என்பது அதிமுகவில் ஒருங்கிணைப்பு உருவாகிறது என்பதை உறுதியுள்ளாக்கியுள்ளது. இருப்பினும் வைகைச்செல்வன் பேசிய இந்த கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்வரா? என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.
மற்றொருபுறம் கூட்டத்தில் பங்கேற்ற சசிகலா என்ற பெண்மணியைப் பார்த்தே வைகைச் செல்வன் இவ்வாறு எல்லாம் பேசியதாகவும், அந்த வீடியோவை வி.கே.சசிகலாவை குறிப்பிட்டு அவர் பேசியதாக வாட்ஸ்அப்பில் வைரலாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுக இரட்டை இலைச் சின்னம் விவகாரம்... சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு..!