''பாஜக சொல்லித்தான் விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கிறார்... இல்லையென்றால் விஜய் வீட்டுக்கு வருமான வரித்துறையை அனுப்பி வைத்து நிரூபிக்கச் சொல்லுங்கள்'' என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அப்பாவு, ''விஜய் கட்சி ஆரம்பித்தது வரவேற்கத் தக்கதுதான். அவர் கட்சி ஆரம்பித்ததில் தவறு கிடையாது. மக்களுக்கு உதவி செய்வதாக வந்திருக்கிறார். ஆனால் அவர் பொதுச் செயலாளராக வைத்திருக்கிற புஸ்ஸி ஆனந்துக்கும், அமித் ஷாவுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது தெரியுமா? எவ்வளவு காலம் அமித் ஷாவுடன் தொடர்பில் இருக்கிறார் தெரியுமா?
இதையும் படிங்க: சிரிப்பலையில் மூழ்கிய சட்டப்பேரவை... சபாநாயகரின் பேச்சால் சுவாரஸ்யமான விவாதம்!!

அவரை பொதுச் செயலாளராக வைத்திருந்தால் இந்த கட்சி எப்படி போகும் என்று சொல்லுங்கள். ஏற்கனவே வால்போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தார்கள். வருங்கால முதலமைச்சரே என புஸ்ஸி ஆனந்த்துக்கு நோட்டீஸ் அடித்து ஒட்டி இருந்தார்கள். இது மறைமுக அஜண்டா.பிஜேபி அஜெண்டா. விஜய் கட்சியின் பொதுச் செயலாளர் முதலமைச்சர் வேட்பாளர் என்று அமித்ஷா சொன்னால் நீங்களும், நானும் என்ன செய்ய முடியும்?

ஆயிரம் கோடி ரூபாய் வருடத்திற்கு வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறதாக தவெகவினர் சொல்கிறார்கள். அப்படியானால், 820 கோடிக்கு வருமான வரியை கட்டிவிட்டு பேச வேண்டும். 80 கோடி மட்டும் வருமான வரி கட்டினால் எப்படி? அப்படியானால் வருமான வரித்துறை, மத்திய அரசு இதற்கு நடவடிக்கை எடுக்குமா? எடுத்தால் பிஜேபி அரசு சொல்லி இவர் கட்சி ஆரம்பிக்கவில்லை. தனியாகத்தான் கட்சி ஆரம்பித்திருக்கிறார் என்று மக்கள் நம்புவார்கள். விஜய் வீட்டிற்கு வரிமான வரித்துறை போகவில்லை என்றால் எல்லோரும் நாம் சொல்வது போல் பிஜேபி சொல்லித்தான் இவர் கட்சி ஆரம்பித்திருக்கிறார் என்பதுதான் உண்மை'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிப்பதாக ஆவேசம்..!