மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு தமிழகம் வருகை தர உள்ளார். தொடர்ந்து நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் உட்பட பல்வேறு தரப்பினரை அமித்ஷா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது தமிழக பா.ஜ.க தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில், பரபரப்பான அரசியல் சூழலில், அமித்ஷாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதற்காக இன்று இரவு 7.05 மணிக்கு டெல்லியில் உள்ள அவரது வீட்டிலிருந்து புறப்பட்டு சாலைவழியாக பி.எஸ்.எப், இரவு 7.25 மணிக்கு விமான தளத்திற்கு செல்கிறார். பிறகு இரவு 7.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, இரவு 10.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.
இதையும் படிங்க: 2026-ல் எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர்..! அடிச்சு சொல்லும் ஆர்.பி.உதயகுமார்..!

அதை தொடர்ந்து சென்னையில் உள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா ஹோட்டலுக்கு சென்று தங்க உள்ளார். பின்னர் நாளை காலை 10 மணி முதல் மாலை 4.20 மணி வரை முக்கிய நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெறுகிறது. அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக மாலை 4.40 மணிக்கு சென்னை, மயிலாப்பூரில் உள்ள தியாகராஜபுரம் செல்லும் அமித்ஷா மாலை 6 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்படுகிறார்.

இந்த நிலையில், பாபா சாகேப் அம்பேத்கரை இழிவாக பேசியும், தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசை கண்டிக்கும் விதமாகவும் தமிழகம் வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிராக தனது தலைமையில் சென்னை மைலாப்பூரில் நாளை காலை கருப்புக்கொடி ஏந்தி, கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வரும் 31 ஆம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை.. கண்காணிப்பு வளையத்துக்குள் குமரி..!