''தவெக தலைவர் விஜய் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை வெளியே நிற்க வைத்துவிட்டு நிகழ்ச்சி நடத்தக் கூடாது'' என பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ''கரடி காரித் துப்பியது போன்று சந்திரபாபு நாயுடு நேற்றைய தினம் 10 மொழிகளை படிக்கலாம் என கூறியிருக்கிறார். ஆந்திரா மட்டுமல்ல, ஹைதராபாத், வெளிநாடுகளிலும் தெலுங்கு மொழி இருக்க வேண்டும் என கருதுகிறார்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் சி.ஐ.எஸ்.எப் நிகழ்வில் பங்கேற்றார். மத்திய ஆயுதமேந்திய காவல்துறை பயிற்சி மையத்துக்கு, ராஜ ஆதித்ய சோழன் என்ற பெயரை உள்துறை அமைச்சர் சூட்டி இருக்கிறார். 1,300 ஆண்டுகளுக்கு முன்பு யானை மீது அமர்ந்து வீர மரணம் அடைந்தவர். மத்திய அரசுக்கு பாஜக அரசுக்கு நன்றி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமித்ஷா ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற கல்விகளை தாய் மொழியில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார். இரண்டாவது முறையாக இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: 'பாஜகவுடன் கூட்டணிக்கு அதிமுக தவம் கிடக்கிறது…! மீண்டும் கலைத்துப் போட்டும் ஆடும் அண்ணாமலை..!

இரண்டு ஆண்டுகளாகியும் இந்த கோரிக்கையை செயல்படுத்தவில்லை என அமித்ஷா சொல்லி இருக்கின்றார். அமித் ஷாவை வரவேற்க ஒட்டப்பட்டதாக வைரலாகும் போஸ்டருக்கும் பாஜகவிற்கும் இந்த சம்பந்தமும் இல்லை. இது வழக்கம் போல திமுகவினர் செய்தது. பாஜக போஸ்டர் தயார் செய்வதற்கு சில வழிமுறைகள் உள்ளது. இது பாஜகவின் போஸ்டர் அல்ல. இது யார் ஒட்டியது என்பது குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும்.
தவெக வினர் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை வெளியே நிற்க வைத்துவிட்டு, நிகழ்ச்சி நடத்தக் கூடாது. இந்திய அரசு கொடுத்துள்ள வீரர்களை சிறுமைப்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும். அதை தாண்டி உங்களுக்கு என்ன பாதுகாப்பு வேண்டுமோ அதை வைத்துக் கொள்ளுங்கள்.

பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, பாஜகவால் தோற்றம் என சொல்லி இருக்கக்கூடிய நிலையில் பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கி இருக்கிறோம். எந்த கட்சியையும் சிறுமைப்படுத்தவோ எந்த தலைவரையும் சிறுமைப்படுத்தவோ விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் முதலமைச்சர் என்பதை பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். பாஜகவால் தோற்றம் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று சொன்னார்கள், இன்று பாஜக வேண்டும் என்று தவம் இருக்கும் சூழலை உருவாக்கியுள்ளோம்.

பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற நிலையை ஒவ்வொரு தொண்டனும் உருவாக்கியுள்ளனர். நம்மை நம்பி வளர்ந்த கூட்டணியில் பயணிக்கிறார்கள் அவர்களை உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறோம்'' என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இது திமுகவின் அல்லு சில்லு பையலுக வேலை'... போஸ்டருக்கு அண்ணாமலை பதிலடி..!