ஷான் பேக்கர் இயக்கிய அனோரா திரைப்படம் ஐந்து ஆஸ்கர் விருதுகளை தட்டி தூக்கியது. பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்தது. இதில் மார்க் எடேல்டின், யுரிய் போரிசவ், லுனா சோவியா மரிடானா , கரேன் கராகுலியன், வச்சே டோவ்மாஸ்யன், அலெக்ஸி செரிப்ரியாகோவ் ஆகியோர் நடித்திருந்தார்.
கடந்த ஆண்டு ரிலீசாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இத்திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் என ஆறு பிரிவுகளில் ஆஸ்கர் நாமினேஷனில் இடம் பெற்றது. கடைசியாக சிறந்த அசல் திரைக்கதை சிறந்த எடிட்டிங், சிறந்த துணை நடிகர், சிறந்த நடிகர் துறைநடிகர் என ஐந்து விருதுகளை வென்றது.
இது பாலியல் தொழிலாளின்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

பாலியல் தொழிலாளி செய்யும் பெண்ணுக்கு காதல் வந்தால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும், அவளது திருமண வாழ்க்கையில் வரும் தடைகள் என்ன என்பது குறித்து எதார்த்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் ஷான் பேக்கர்.
இதையும் படிங்க: என்ன மனுஷன்ய்யா... உலகையே திரும்பி பார்க்க வைத்த அனோரா!!
ரெட் ராக்கெட், தி ஃப்ளோரிடா புராஜெக்ட் படைப்புகள் மூலம் அதிகம் கவனம் ஈர்த்தவர் ஷான் பேக்கர். இவரது அடுத்த படைப்பான வெளியாது தான் அனோரா. கடந்த ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் மிக்கி மேடிசன், பால் வைஸ்மேன், யூரி போரிசோவ், லிண்ட்சே நார்மிங்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனோரா கதையை ஒன்லைனில் சொல்ல வேண்டும் என்றால், பாலியல் தொழிலாளிக்கும், பணக்கார ஹீரோவுக்கும் ஏற்படும் காதல் தான்.

இந்த ஒரு கான்செப்டை வைத்து கொண்டு திரைக்கதையை இயக்கிய ஷான் பேக்கர் விருதுகளை வாங்கி குவித்து வருகிறார். இந்த நிலையில் 5 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த அனோரா திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற 17ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: கோடீஸ்வரனுக்கு பாலியல் தொழிலாளி மனைவியா... அனோரா கதை தெரியுமா?