பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே மற்றும் தினேஷ் சர்மா ஆகியோர் நீதித்துறை மற்றும் நாட்டின் தலைமை நீதிபதி குறித்து வெளியிட்ட அறிக்கைகளுக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்திருந்தார். பாஜக இந்த அறிக்கைகளை முற்றிலுமாக நிராகரிக்கிறது எனவும் கூறி இருந்தார்.

இதனை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இந்திய தலைமை நீதிபதி குறித்து இரண்டு பாஜக எம்.பி.க்கள் தெரிவித்த ஆட்சேபகரமான கருத்துக்களிலிருந்து பாஜக தலைவர் தன்னைத்தானே ஒதுக்கி வைத்துக் கொள்வது அர்த்தமற்றது என கூறியுள்ளார்.
மீண்டும் மீண்டும் வெறுப்பு உரைகளை நிகழ்த்துவதில் பெயர் பெற்றவர்கள் இந்த எம்.பி.க்கள் என்றும், தனது சொந்தக் கட்சியில் உயர் அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற நபர், நீதித்துறை குறித்து மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளைத் தெரிவித்ததில் மௌனம் காத்து வருகிறீர்களே அதை பாஜக ஆதரிக்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: ‘வக்ஃபு திருத்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்’.. காங்கிரஸ் கடும் வேதனை..!

அரசியலமைப்பின் மீதான இத்தகைய தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பிரதமர் மோடியின் மறைமுக ஒப்புதல் இல்லையென்றால், இந்த எம்.பி. மீது அவர் ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: தேர்தலில் திமுக கூட்டணிக்கு 200 தொகுதிகள் கன்ஃபர்ம்.. அமைச்சர் எஸ். ரகுபதி தாறுமாறு.!!