மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக மாநில நிர்வாகி மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரையை சேர்ந் எம்.எஸ்.ஷா.பாஜக பொருளாதாரப் பிரிவு மாநிலத் தலைவராகப் பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார். இவர் மீது 15 வயது பள்ளி மாணவி ஒருவரின் தந்தை, மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தனது மகளின் செல்போனுக்கு, பாஜக நிர்வாகி ஷாவின் செல்போன் எண்ணிலிருந்து இருந்து தொடர்ந்து ஆபாசமான உரையாடல்கள் வந்துள்ளதாக புகார் அளித்தார். மேலும் கடனை அடைக்க பண உதவி செய்வதாக கூறி முதலில் தனது மனைவியிடம் தகாத உறவில் இருந்த ஷா, தனது மகளுக்கும் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வேண்டாம் புறக்கணிப்பு.. அதிமுகவுக்கு சரிவு தொடங்கிவிடும்.. அதிமுக மீது திருமா கரிசணம்!
தனது மனைவி மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதாக கூறி, தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பாஜக நிர்வாகி ஷாவுடன் அடிக்கடி தனிமையில் இருக்க வைத்ததாகவும் பகீர் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், பாஜக பொருளாதாரப் பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா மீதும், சிறுமியின் தாய் மீதும் போக்சோ சிறப்பு சட்டம் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது எம்.எஸ்.ஷா சிறுமியுடன் பேசிய உரையாடல் ஆதாரங்கள் கிடைத்ததன. இதனடிப்படையில் சிறுமிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சட்டமன்றத்தில் வெறும் வாக்கிங்.. இந்த ஆளுநர் தேவையா.? உதயநிதி ஸ்டாலின் பொளேர்!