தமிழக அரசு 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்துள்ளது. சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்தார். அதில் தமிழுக்கு முக்கியத்தும் கொடுக்கும் விதமாக தமிழ் இலக்கிய நூல்களின் மொழிப்பெயர்ப்பு, தமிழ் புத்தக கண்காட்சி, தொல்லியல் அகழாய்வு உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி வளர்ச்சி தொடர்பான அறிவிப்புகள்:-
- தலை சிறந்த 500 தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
- தமிழர்கள் வசிக்கும் பிற மொழி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்படும்.
- ரூ.40 கோடியில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம்.
- இராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகம் - ரூ.21 கோடி
- ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம் - ரூ.22 கோடி.
- மேலும் 45 உலக மொழிகளில் திருக்குறள் - ஐ.நா. அவை அங்கீகரித்துள்ள 193 மொழிகளுக்கும்
- உலகத் தமிழ் ஒலிம்பியாட் ரூ.1 கோடி பரிசுத்தொகை.
- தமிழ்நாட்டில் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள்.

பட்ஜெட் தொடங்குவதற்கு முன்பாக மொம்மொழி கொள்கை தீவிர பிரச்சனையாக மாறியுள்ளது. தமிழக பட்ஜெட்டில் ரூ என்ற தமிழக எழுத்தை பயன்படுத்தியதும் தேசிய அளவில் விவாதமாகியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தற்போது தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், கல்வித்துறைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதமான அறிவிப்புகளை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளது. திருக்குறள் முதல் தொல்லியல் அகழாய்வு வரையிலான பட்ஜெட் தமிழ் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதையும் படிங்க: தமிழக பட்ஜெட் 2025... இதெல்லாம் கவனிச்சீங்களா..?
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகைக்கு இன்னும் விண்ணப்பிக்கலையா?... பட்ஜெட்டில் வெளியானது மகிழ்ச்சியான செய்தி...!