கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள திருப்பெயர் பகுதியில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் 7வது மாநில மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் கல்வி சீரினை பள்ளி கல்வி துறை அமைச்சரிடம் வழங்கி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் அப்பா என்ற பெயரில் PTA செயலியை தொடங்கிவைத்து பெற்றோர் ஆசிரியர் கழக மாநாடு சிறப்பு மலரை வெளியிட்டார்.
பின்னர் விழாவில் சிறப்புரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், பள்ளி கல்வி துறையில் தமிழக அரசு உலக அளவில் சாதனைகளை செய்து வருகிறது. தமிழக பள்ளி கல்வி துறை இந்தியாவிலேயே 2ஆம் இடம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: முடிஞ்சா இத செஞ்சு காட்டுங்க... மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஓபன் சேலஞ்ச்...!

இந்த ஆண்டு பள்ளி கல்வி துறைக்கு 44 கோடியும், உயர்கல்வி துறைக்கு 200 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக அரசு பள்ளி கல்வி துறையில் சிறந்து விளங்குவதாக மத்திய அரசு நம்மை பாராட்டினாலும். மறுபுறம் பள்ளி கல்வி துறைக்கு வழங்க வேண்டிய 2,152 கோடி நிதியை தர மறுக்கின்றனர். இது 43 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு செலவு செய்யவேண்டிய தொகை. புதிய கல்வி கொள்கையை நாம் ஏற்க மறுப்பதால் நிதியை தர மறுக்கின்றனர்.
புதிய கல்வி கொள்கை சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் கொள்கை. தமிழுக்கு தமிழ் நாட்டிற்கு வேட்டு வைக்கும் கொள்கை. இது குழந்தைகளின் எதிர் காலத்துக்கு ஆபத்து. எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாங்கள் எதிரிகள் இல்லை. எந்த மொழியை திணிக்க நினைத்தாலும் அந்த திணிப்பை எதிர்ப்போம். அதில் உறுதியாக இருப்போம்.

புதிய கல்வி கொள்கை மாணவர்களை பள்ளியிலிருந்து துரத்தும் கொள்கை, சமூக நீதிக்கு எதியான கொள்கை, இந்த கல்வி கொள்கையில் 3, 5, 8 ஆம் வகுப்பில் பொது தேர்வு, 9 முதல் 12 வரை செமஸ்டர் தேர்வு முறை, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விரும்பிய கல்லூரியில் சேர முடியாது அவர்கள் பொது நுழைவு தேர்வு எழுத வேண்டும். அந்த தேர்வும் தேசிய அளவில் நடைபெறும்.
இந்த கல்வி கொள்கையில் 6 வகுப்பு முதல் குலக்கல்வி திட்டத்தை அமல்படுத்த பார்க்கின்றனர்.இதை பார்த்து தான் தேசிய கல்வி கொள்கையை ஏற்க்க மறுக்கிறோம். 2,152 கோடி அல்ல 10 ஆயிரம் கோடி கிடைத்தாலும் இந்த கொள்கையை ஏற்க மாட்டோம்.

2,152 கோடிக்கு கையெழுத்து போட்டால் 100 ஆண்டு பின்னோக்கி செல்வோம். இதை ஒருபோதும் செய்ய மாட்டேன். நான் எந்த மொழிக்கும் எதிரி அல்ல. யார் விரும்புகிறார்களோ அவர்கள் ஹிந்தி படிக்கலாம்.
இந்தியை திணிக்க நினைத்தால் தமிழர் என்ற ஓர் இனம் உண்டு அவருக்கு தனி குணம் உண்டு. ஒன்றிய கல்வி அமைச்சர் கேட்கிறார் பல மாநிலங்கள் புதிய கல்வி கொள்கையை ஏற்கின்றனர். ஆனால் தமிழ்நாடு மட்டும் ஏற்றுகொள்ள வில்லை
ஒரு இனத்தை அழிக்க மொழி கலாச்சாரத்தை அளித்தால் போதும் என்று துணை ஜனாதிபதி சொல்கிறார். இந்தியாவில் 72 ஆண்டில் 62 மொழி அழைத்துள்ளது. ஹிந்தி உள்ள மாநிலங்களில் 25 மொழிகள் அழிந்துள்ளது.
மத்திய அரசு சமஸ்கிரத மொழி வளர்ச்சிக்கு 1,488 கோடி ஒதுக்கி உள்ளது. அந்த மொழி பேசுபவர்கள் சில ஆயிரம் பேர் மட்டுமே. ஆனால் 8 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழிக்கு 76 கோடி ஒதுக்குகின்றனர்.மத்திய அரசு பள்ளி கல்வி துறை நிதியை நிறுத்தினாலும் அனைத்து திட்டங்களும் தொடரும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாடிஸ்ட் அரசு..! பரிதாபங்கள் வீடியோ பார்த்து அறிக்கை விட்ட முதல்வர் மு.க ஸ்டாலின்..!