பார்வையற்ற மாற்றுத்திறனாளி சிறுமிக்கு கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கி நன்றாக படிக்க வேண்டும் ,உன்னிடம் பிடித்ததே தன்னம்பிக்கை தான் என ஆறுதல் கூறினார் ஆட்சியர் உமா.
நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் யோகேஸ்வரி தம்பதியர். இவர்களது இளைய மகள் சக்தி செல்லம்மாள் பார்வை திறன் அற்ற மாற்றுத்திறனாளி. இவர் சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தனது சகோதரர் செளதருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது தனக்கு அரசு சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் கண் கண்ணாடி மற்றும் ஊன்றுகோல் வழங்க வேண்டும் என ஆட்சியர் உமாவிடம் கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, ஆட்சியர் உமா மாணவியின் நிலையறிந்து உடனடியாக அவருக்கு கண் கண்ணாடி மற்றும் ஊன்றுகோலை வழங்கியதோடு மாணவியுடன் கலந்துரையாடினார். மாணவி சக்தி செல்லம்மாளுக்கு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மணி பார்க்கும் வகையில், கடிகாரம் ஒன்றையும் பரிசாக வழங்கினார். மேலும் மாணவியிடம் நன்றாக படிக்க வேண்டும், உன்னிடம் பிடித்ததே தன்னம்பிக்கை தான் எனவும் ஆறுதல் தெரிவித்தார்.ஆட்சியரின் இந்த செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது
இதையும் படிங்க: ‘பேச்சுதான் காமெடி... வீச்செல்லாம் டெர்ரர்ர்ர்...’: உறுத்தல் ‘உதயகுமார்’... ரவுசு ‘ராஜூ’... சூடேறும் ரத்தத்தின் ரத்தங்கள்..!
இதையும் படிங்க: நாகர்கோவில் காசியை மிஞ்சிய மயிலாடுதுறை மன்மதன்... கல்யாணமான பெண்களே டார்க்கெட்... லிஸ்டில் 10 பெண்கள்..!