அதிமுக ஆட்சி காலத்தில் தான் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
விஜய் பரந்தூர் விசிட்:
காஞ்சிபுரம் அருகே பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் சென்னையின் 2வது விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளன. இதற்காக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி வளத்தூர்,அக்கம்மாப்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 900 நாட்களாக போராடி வருகின்றனர். ஆரம்பத்தில் முழு வீச்சுடன் நடந்து வந்த போராட்டம், தற்போது சில கிராம மக்கள் மட்டுமே பங்கேற்கும் அளவிற்கு குறுகி போனது. ஆனால் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் விசிட் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: ராகுல்காந்தி விஜய்க்கு கொடுத்த கிரீன் சிக்னல்...மகிழ்ச்சியில் காங்கிரஸ்...செல்வப்பெருந்தகை பேச்சின் பின்னணி இதுதானா?

இந்த விவகாரத்தில் திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்த நிலையில், தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக கோரிக்கை வைக்கவில்லை:
டங்ஸ்டன் ஏலம் விட காங்கிரஸ் மற்றும் திமுக ஏற்கனவே நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றோம் முதலமைச்சரும் மிகத் தெளிவாக தெரிவித்து இருக்கின்றார்.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க திமுகவோ, காங்கிரஸ் கட்சியோ கோரிக்கை வைக்கவில்லை. விமான நிலையம் அமைப்பதற்கு அதிமுக ஆட்சியிலேயே நிலம் தேர்வு செய்யப்படுவதாக கூறப்பட்டது. அப்போதே பரந்தூர் விமான நிலையம் குறித்து நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

விவசாயிகள் பாதிக்கப்படாமல் இடம் தேர்வு செய்ய வேண்டும். பார்ட்னர்ஷிப் முறையில் இடத்தை எடுத்து விமான நிலையம் அமைக்க வேண்டும், நிலம் கொடுத்தவர்களுக்கு விமான நிலையத்தில் பங்கு தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றேன் என்றார்.
எதிர்க்கட்சிகளின் தவறான மதிப்பீடு:
தமிழ்நாட்டு மக்களை எதிர்க்கட்சிகள் குறைத்து மதிப்பிடுகிறார்கள். அடைத்து வைத்தால் பணம் கொடுத்தால் வாக்களிப்பார்களா.? மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதன் அடிப்படையில் ஜனநாயக கடமை ஆற்றுவார்கள். எவ்வளவோ செலவு செய்தும் வெற்றி பெறாத வேட்பாளர்கள் இருக்கிறார்கள். செலவு செய்யாமல் வெற்றி பெற்றவர்களும் இருக்கிறார்கள்.

இது போன்று குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் வைப்பது தவறு. எப்போதும் மக்கள் விலை போக மாட்டார்கள். ஈரோடு தொகுதியை விட்டு கொடுத்தது, அகில இந்திய காங்கிரஸ் எடுத்த முடிவு, அந்த முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுகிறோம். ஜனநாயக அடிப்படையில், நாங்கள் செயல்படுகிறோம்.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உண்டு. எங்களுடைய கொள்கை காங்கிரஸ் ஆட்சி அமைப்பது தான். அது ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உண்டு.
சீமானுக்கு நச் பதிலடி:

தந்தை பெரியாரை புறக்கணித்துவிட்டு தமிழ்நாட்டு அரசியலை பேச முடியாது..
சீமான் மற்ற தலைவர்களை விமர்சித்து பேசி வந்தார். தற்பொழுது உச்சபட்சமாக தந்தை பெரியாரை பற்றி பேசுகிறார். சீமான் தொடக்கூடாததை தொட்டுவிட்டார்.. மக்கள் இதற்கு பதிலடி தருவார்கள்..
இதையும் படிங்க: இந்தியா கூட்டணியில் தவெக இணைய வேண்டும்...