ஏராளமான மரங்களை வெட்டுவது என்பது மனிதர்களைக் கொல்வதைவிட மோசமானது என்று உச்ச நீதிமன்றம் வேதனையும், கண்டனமும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மரம் வெட்டியவருக்கு மரம் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் அபராதமும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.
ஆக்ராவில் தாஜ்மஹால் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியைக் காக்க பொதுநலன் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தாஜ்மஹாலைச் சுற்றியிருக்கும் பகுதி தாஜ் டிராபேஜியம் மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அடர்ந்த வனப்பகுதியில் மரங்களை வெட்டக்கூடாது என்று உத்தரவுகள் இருக்கின்றன.

தாஜ் டிராபேஜியம் மண்டலம் என்பது 10,400 சதுர கி.மீ பகுதி வனப்பகுதியாகும். இந்த பகுதி ஆக்ரா, ப்ரோஜாபாத், மதுரா, ஹத்ராஸ், உ.பியின் ஈத்கா மாவட்டங்கள், ராஜஸ்தானின் பாரத்பூர் ஆகியவற்றை தொட்டுச் செல்லும்.இ ங்கிருக்கும் மரங்களை பாதுகாக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மதுரா-விருந்தாவனில் உள்ள டால்மியா ஃபார்ம்ஸ் உரிமையாளர் சிவ சங்கர் அகமர்வால், உத்தரவின் பெயரில் 454 மரங்கள் வெட்டிசாய்க்கப்பட்டன. இதை எதிர்த்து பல்வேறுமனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: ‘மனிதநேயமற்ற, உணர்வற்ற செயல்’: பலாத்கார வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை..!

இந்த மனுவின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபெய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜால் புயான் அமர்வில் நேற்று விசாணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவித்த உத்தரவில் “ சுற்றுச்சூழல் மீறல் வழக்குகளுக்கு எந்தக் கருணையும் காண்பிக்கக் கூடாது. ஏராளமான மரங்களைவெட்டுவது என்பது மனிதர்களைக் கொல்வதைவிட மோசமானது. ஆனால், மனுதாரர் 454 மரங்களை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான தாஜ் டிராபேஜியம் மண்டலத்தில் எந்த முன் அனுமதியும் இல்லாமல் வெட்டியுள்ளார். இந்த மரங்களுக்கு அளவாக வேறு மரக்கன்று நட்டு இதுபோல் மரமாக வளர்வதற்கு குறைந்தபட்சம் 100 ஆண்டுகள் தேவைப்படும். இதுபோன்று மரங்களை வெட்டுவதை மனிதர்களை கொல்வதைவிட மோசமானதாகப் பார்க்கிறோம்.

மரங்கள் குறித்து கணக்கெடுக்க அமைக்கப்பட்ட மத்திய அதிகாரமிக்க குழுவின் அறிக்கையை ஏற்கிறோம். அந்த குழு பரிந்துரை செய்தபடி, ஒரு மரத்துக்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் என்பதையும் ஏற்கிறோம்” என உத்தரவிட்டனர்.
மரம் வெட்டியவர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகல் ரோத்தகி ஆஜராகி வாதிடுகையில் “மனுதாரர் செய்தது தவறுதான், ஆனால் அபராதத் தொகையை குறைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிபதிகள், அபராதத் தொகையை குறைக்க மறுத்துவிட்டனர். அதுமட்டுமல்லாமல், அகர்வால், அந்தப் பகுதியின் அருகே மரங்களை நட்டு வளர்க்கவேண்டும் இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்” என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சர்ச்சையான ‘மார்பகத்தை பிடிப்பது பலாத்காரமில்லை’ தீர்ப்பு.. அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்..!