கரூரை சேர்ந்த நபர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கரூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை ரத்து செய்து விவாகரத்து வழங்கக் கோரி அவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பூர்ணிமா அமர்வு விசாரித்த நிலையில், மனைவி ஆபாசப் படங்கள் பார்ப்பது, சுய இன்பத்தில் ஈடுபடுவது போன்றவை கணவரை கொடுமைப்படுத்துவது ஆகாது என கருத்து தெரிவித்துள்ளது. மேலும், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,மனுதாரருக்கும் அவர் மனைவிக்கும் 2018-ல் திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தைகள் இல்லை.,இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.ஏற்கெனவே இருவரும் முதல் திருமணத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர். தற்போது 2-வது திருமணத்தில் இருந்தும் வெளியேறும் வகையில் நீதிமன்றத்தை நாடியுள்ளனர் என்று கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம்.. தனிநீதிபதியின் தீர்ப்புக்கு தடைவித்த உயர்நீதிமன்றம்..!

2020 டிசம்பர் மாதத்திலிருந்து கணவன், மனைவி பிரிந்து வாழ்வதாகவும், தனது மனைவிக்கு பாலியல் நோய் உள்ளது., அவர் ஆபாச படங்களை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்., மாமனார், மாமியாரும் தன்னை மதிக்கவில்லை, அதிமாக செலவு செய்கிறார்., அதிக நேரம் போனிலேயே செலவிடுகிறார்., வீட்டு வேலைகளை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளை கூறி விவாகரத்து கோரி மனுதாரர் மனு தாக்கல் செய்துள்ளார்., ஆனால், மனைவி பாலியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கு மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யவில்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

உண்மையில் மனைவிக்கு பாலியல் நோய் இருந்திருந்தால் இருவரும் 2 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துள்ளதால் மனுதாரருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் ஆனால், அவ்வாறு எதுவும் இல்லை. மேலும் மனைவிக்கு பெண்கள் தொடர்பான நோய் இருப்பதாக மனுதாரர் கூறியுள்ளார். அந்த நோய் எளிதில் குணப்படுத்தக்கூடியதே என விளக்கமளித்துள்ளனர்.

பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவது இல்லற வாழ்வில் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு தரவுகள் எதுவும் இல்லை மற்றும் சுய இன்பம் தடை செய்யப்பட்ட ஒன்றல்ல. இதனால் மனைவி ஆபாச படங்கள் பார்ப்பது, சுய இன்பத்தில் ஈடுபடுவது ஆகிய கணவரை கொடுமைப்படுத்துவது ஆகாது என்று தெரிவித்தனர்.மனைவியின் தனியுரிமைக்கான வரையறையில் அவரது பாலியல் சுதந்திரத்தின் பல்வேறு அம்சங்களும் அடங்கியுள்ளது என்று கூறி விகாரத்து கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கட்டுமான பொருட்கள் விலை உயர்வு... ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு..!