"அதிமுகவினர் பாஜகவுடன் கூட்டணி வைப்பதும் ஒன்றுதான், பாடையில் போய் உட்காருவதும் ஒன்றுதான் " என பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் தமிழ் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக கட்சியின் தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதையும் படிங்க: ஒன்னா தேர்தலை சந்திக்கிறோம்.. பாஜகவை வீழ்த்துறோம்.. ஸ்டாலினை சந்தித்த எம்.ஏ. பேபி சூளுரை!

முன்னாள் முதலமைச்சர் பழனிச்சாமிக்கு திமுகவின் ஆட்சி பொறுக்க முடியவில்லை எனவும், எப்படியாவது திமுகவை தோற்கடிக்க வேண்டும் என பிஜேபியுடன் அதிமுகவினர் கூட்டணி சேர்ந்து விட்டனர் எனவும், பாஜகவுடன் கூட்டணி சேர்வதும், பாடையில் உட்காருவதும் ஒன்றுதான் என அவர் தெரிவித்தார். மேலும் 2026 ஆம் ஆண்டு ஏழாவது முறையாக திமுக ஆட்சி இந்த மண்ணில் மலரும் திமுக காப்பாற்றப்பட வேண்டும் என மேடையில் பேசினார்.

வர உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்துவதற்காக அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இதற்கு முன்னதாக பாஜகவுடன் எக்காரணம் கொண்டும் கூட்டணி அமைக்கமாட்டோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தெரிவித்து வந்தார். இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கட்டாயத்தின் பேரில் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருப்பதாகவும், மிரட்டி பணியவைக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இதையும் படிங்க: மூன்றாவது முறையாக அதிமுக - பாஜக கூட்டணிக்கு தோல்வி உறுதி.. விளாசும் முதல்வர் மு.க. ஸ்டாலின்.!!