அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் மாநாடு மார்ச் 4 ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் டெல்லியில் தொடங்க உள்ளது.

அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தேர்தல் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காகவும் பல்வேறு அனுபவரீதியான தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காகவும் மாநாடு ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் ஒற்றைத் தலைமை வந்து என்னாச்சு..? பாயிண்டைப் பிடித்த ஓ. பன்னீர்செல்வம்.!
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் கடந்த வாரம் பொறுப்பேற்றார். கேரளாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஞானேஷ் குமார், ராஜீவ் குமாருக்குப் பதிலாக இந்தியாவின் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவின் 26-வது தலைமை தேர்தல் ஆணையர் ஆவார்.தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான புதிய சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட முதல் சி. இ.சி இவர் தான்.

இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தேர்தல் அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஆலோசிப்பதற்காக மார்ச் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் இந்த 2 நாள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், ஒரு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஒரு வாக்காளர் பதிவு அதிகாரி பங்கேற்க தலைமை தேர்தல் அதிகாரிகள் பரிந்துரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதல் நாள் மாநாட்டில், தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு, சமூக ஊடக அணுகலை மேம்பாடு, தேர்தல் செயல்முறைகளில் பல்வேறு செயற்பாட்டாளர்களின் சட்டப்பூர்வ பங்கு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாள் மாநாட்டில், முந்தைய நாள் கலந்துரையாடியவை தொடர்பான கருப்பொருள் விவாதங்கள் குறித்த செயல்திட்டங்களை அதிகாரிகள் முன்வைக்க உள்ளதாக தேர்தல் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், வாக்காளர் பதிவு அதிகாரியும் பங்கெடுப்பது இதுவே முதல்முறை. மாவட்ட மற்றும் சட்டசபை தொகுதிகளில் இந்த அதிகாரிகள் முக்கிய செயல்பாட்டாளர்களாக அங்கம் வகிப்பதால் மாநாட்டில் பங்கெடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகள் அனுபவரீதியாக பல தகவல்களை தெரிந்து கொள்ளும் தளமாக அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட வருகின்றன.
இதையும் படிங்க: இரட்டை இலை சின்னம் முடக்கமா.? ஈபிஎஸ் தரப்புக்கு பிரஷரை எகிற வைக்கும் பெங்களூரு புகழேந்தி.!