அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற நாள் முதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் குறிப்பாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களை நாடு கடத்தினார். அதில் இந்தியர்கள் 300க்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதனிடயே டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. இருந்தபோதிலும் டிரம்ப் நாடு கடத்துவதை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே கியூபா, ஹைட்டி, நிகரகுவா மற்றும் வெனிசுலா ஆகிய நாட்டை சேர்ந்தவர்களின் சட்டப் பாதுகாப்பை ரத்து செய்யப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்தார்.

மேலும் அவர்களை ஒரு மாதத்தில் நாடுகடத்த போவதாகவும் தெரிவித்தார். இதன்மூலம் சுமார் 5 லட்சத்து 32 ஆயிரம் பேர் உள்ளனர் நாடு கடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 35 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்த தம்பதியை திடீரென அந்நாட்டு அதிகாரிகள் நாடுகடத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் சில வகையான கிரீன் கார்டு வைத்து உள்ள இந்தியர்கள் தப்பி தவறி கூட சொந்த நாட்டிற்கு திரும்பி போக கூடாது என்று வல்லுனர்கள் எச்சரிக்கை விடுக்க தொடங்கி உள்ளனர். அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்களால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரான் வெளியிட்ட ஏவுகணை நகரம்.. அமெரிக்காவை எச்சரித்து வீடியோ வெளியீடு..!

இதனிடையே அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்து இருப்பவர்களை மீண்டும் மறு ஆய்விற்கு உட்படுத்துவது, அவர்களின் கிரீன் கார்டுகளை நீக்குவது, நாடு கடத்துவது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்தியர்கள் பலர் இந்த ஆய்விற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. சில இந்தியர்களை, நீங்கள் கிரீன் கார்டுகளை துறந்துவிடும்படி அமெரிக்க தூதரக அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதாகவும் இதற்காக US Custom and Border Protection (CBP) அதிகாரிகள் களமிறக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் வயதானவர்களை தங்கள் கிரீன் கார்டுகளை சரண்டர் செய்யும்படி தொடந்து அழுத்தும் கொடுத்து வரும் நிலையில் அமெரிக்க இந்தியர்கள் எக்காரணம் கொண்டும் இந்தியா வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் மட்டுமன்றி அமெரிக்காவில் சில வகையான கிரீன் கார்டு வைத்து உள்ள வெளிநாட்டினர் யாரும் சொந்த நாட்டிற்கு திரும்பி போக கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நியூயார்க்கை சேர்ந்த குடிவரவு வல்லுனர் மற்றும் வழக்கறிஞரான பாஷு ஃபுலாரா, கிரீன் கார்டு வைத்துள்ளவர்கள் இந்த நேரத்தில் சொந்த நாட்டிற்குள் செல்வது சிக்கல். முக்கியமாக வயதானவர்கள்.
ஏனென்றால் அவர்கள் திரும்பி வரும் போது சிக்கல் ஏற்படலாம். அதேபோல் ஒரு தனிநபர் தனது சொந்த நாட்டில் துன்புறுத்தல் காரணமாக அடைக்கலம் கேட்டு.. அடைக்கலத்திற்கான கிரீன் கார்டு பெற்று இருந்தால். அவர்களும் சொந்த நாட்டிற்கு செல்ல கூடாது. இது போன்ற யாராவது தாமாக முன்வந்து அந்த நாட்டிற்குத் திரும்பும்போது,அவர்கள் மீண்டும் வரும் போது சிக்கல் ஏற்படலாம். சமயங்களில் அவர்களின் கிரீன் கார்டு கூட ரத்து செய்யப்படலாம் என்று எச்சரித்து உள்ளார்.
இதையும் படிங்க: இறக்குமதி கார்களுக்கு 25% வரி.. அதிபர் ட்ரம்ப் அதிரடி.. நேரடி தாக்குதல் என கனடா கன்டனம்..!