கிலன் பார் சின்ட்ரோம் நோய் புனே நகரில் வேகமாகப் பரவி இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிலன் பார் சின்ட்ரோம் என்றால் என்ன..?
கிலன் பார் சின்ட்ரோம் என்பது மனிதர்களுக்கு அரிதாக ஏற்படும் நரம்பு கோளாறாகும், இதில் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு நரம்புகளைத் தாக்கி உடலை பலவீனப்படுத்தி, உடல் முழுவதையும் முடக்குகிறது சில நேரங்களில் பக்கவாதத்துக்கும் கொண்டு செல்லும். ஆபத்தான நிலைக்கு பாதிக்கப்பட்டவர்களை இட்டுச் செல்லும் என்பதால், இதற்கு சிகிச்சை பெற உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. ஜிபிஎஸ் நோயை முழுவதுமாக புரிந்துகொள்ள முடியவில்லை. பெரும்பாலான பாதிக்கப்பட்டோர் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றால் பாதிக்கபக்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அச்சத்தில் புனே மக்கள்! அரிதான நோய்எதிர்ப்பு நரம்பு கோளாறால் இதுவரை 73 பேர் பாதிப்பு

கிலன் பாரே சின்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நரம்புகள் முடக்கப்பட்டு, தசைப்பகுதியில் வலியும், காய்ச்சலும் அதிகரிக்கும். தசைகள் பலவீனமடையும். கை, கால்கள் மரத்துப் போகும். சாப்பிடுவதற்கும், மூச்சுவிடுவதற்கும் சிரமமாக இருக்கும்.
கிலன் பார் சின்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டபலரும் தீவிரமான சளி, இருமல், சுவாசிப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகளுடன் கடந்த 18ம் தேதி முதல் சோலாப்பூர் மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நோயால் உயிரிழந்த நபர் ஐசியூவில் சேர்க்கப்பட்டு, பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்து, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். உயிரிழந்த நபருக்கு பக்கவாதம் ஏற்பட்டிருந்தது.
சோலாப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியின் டீன் சஞ்சீவ் தாக்கூர் கூறுகையில் “ 40 வயது மதிக்கத்தக்கவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்த நிலையில் அவரின் உடலை ஆய்வு செய்தோம், அதில், அவர் கிலன் பார் சின்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டது தெரிந்தது.

அந்த நபரின் மருத்துவ சிகிச்சை அறிக்கையை ஆய்வு செய்தபோது அவருக்கு ஜிபிஎஸ் தொற்று இருந்தது தெரியவந்தது. 5 நாட்களாகச சிகிச்சை அளித்தபோதும், அவருக்கு சுவாசச்சிக்கல் இருந்தது. கிளினிக்கல் உடற்கூறு ஆய்வு செய்தபின்புதான் உண்மையான காரணம் தெரியவந்தது. இரு உயிரியியல் வல்லுநர்கள், நோயியல் நிபுணர் ஆகியோர் வரவழைக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்தோம். உடற்கூறு ஆய்வு அறிக்கையில் உயிரிழந்த நபர் ஜிபிஎஸ் தொற்றால் உயிரிழந்ததற்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது.
இதை 2வது கட்டமாக உறுதி செய்ய உயிரிழந்த நபரின் ரத்த மாதிரிகளையும், மூளை தண்டுவடம் மாதிரிகளையும் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தோம். இந்த நபர் உயிரிழந்த துல்லியமான காரணம், உயிர்அறிவியல், நோயியல் வல்லுநர்கள் ஆய்வுக்குப்பின், 5 முதல் 6 நாட்களில் தெரியவரும்” எனத் தெரிவித்தார்.
புனே நகரில் கிலன் பார் சின்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. இதில் 68 ஆண்கள், 33 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16 நோயாளிகள் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் உள்ளனர்.

புனேயில் உல்ள சின்காட் சாலைப் பகுதியில் பாதிப்பு அதிகம் என்பதால் அங்கு மருத்துவக் குழுக்கள், சுகாதாரத்துறையினர் தீவிரமாக பரிசோதனை நடத்தி வருகிறார்கள்.
புனே மாநகராட்சி சார்பில் இதுவரை 25,578 வீடுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன, இதில் 15,761 வீடுகள் புனே நகராட்சி எல்லைக்குள் உள்ளன. சின்ச்சாவத் நகராட்சி எல்லையில் 3,719 வீடுகளும், கிராமப்பகுதிகளில் 6,098 வீடுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன
இதையும் படிங்க: டெல்லி தேர்தல்: காங்கிரஸ் - ஆம் ஆத்மி "குடுமி பிடி" சண்டை; கெஜ்ரிவாலுக்கு, பெண் வேட்பாளர் அல்கா லம்பா சவால்