பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால், பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர் அச்சமடைந்து வருகின்றனர். தங்களது குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகின்றன்ர். எனினும் அதிகம் மக்கள் கூடும் இடங்களில் சிறு குழந்தைகள் கவனக்குறைவால் தொலைவது ஆங்காங்கே நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த கும்பமேளாவில் ஏற்பட்ட பயங்கர கூட்டத்தில் ஏராளமானோர் தொலைந்ததாக தெரிவிக்கப்பட்டாலும், அனைவரும் மீண்டும் அவர்களது குடும்பத்தினரை சென்று சேர்ந்துள்ளதாக உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ள்ளது. இந்நிலையில் அதேபோல் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 4 வயது சிறுமி மாயமான செய்தி அனைவரையும் பரபரப்பாக்கியது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே சாமி படங்கள், கயிறுகள் உள்ளிட்ட பொருட்களை ஆன்மீக பொருட்களை விற்பனை செய்பவர் நரசிம்மலு. இவர் திருமலையில் குடும்பத்துடன் தங்கி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று வழக்கம் போல கோயில் அருகே நரசிம்மலு வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அவருடன் 4 வயது மகள் தீட்ஷிதாவும் உடன் இருந்தாள். வியாபாரம் பிசியாக இருந்த நிலையில், நரசிம்மலு தனது அருகில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தையை கவனிக்க தவறி உள்ளார். அதுவரை அவரது அருகில் விளையாடிக் கொண்டிருந்த தீட்ஷிதா தீடீரென மாயமானார். தனது செல்ல மகள் திடீரென மாயமானதை அறிந்த நரசிம்மலு, சுற்றியுள்ள இடங்களில் மகளை தேடி பார்த்துள்ளார். சப்தமாக மகளின் பெயரை சொல்லி அழைத்தும் எந்த வித பதிலும் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: திருப்பதியில் மூச்சு திணறி மயங்கிய சிறுவன்.. 3 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்ததாக அறிவிப்பு.. ..


அலைந்து திரிந்து சோர்ந்து போன, நரசிம்மலு திருமலை போலீசில் புகார் அளித்தார். சிறுமி காணமால் போன புகாரை கேட்டு, பரபரப்பான போலீசார் திருமலையில் இருக்கும் சிசிடிவிகளை ஆய்வு செய்தனர். மாலை 4 மணி வரை தன்னுடன் தனது மகள் இருந்ததாகவும், 5 மணிக்கு மேல் தான் மகள் மாயமானதாகவும் நரசிம்மலு தெரிவித்துள்ளார். இதனால் 5 மணிக்கு மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மாலை 6 மணி அளவில் ஒரு வயதான பெண் சிறுமியை துாக்கிக்கொண்டு திருப்பதி செல்லும் ஆந்திர அரசு பஸ்சில் ஏறிச் சென்றது தெரிந்தது. அதன் பிறகு எங்கு சென்றார் என்று தென்படவில்லை. என பஸ் எண்ணை குறித்துக்கொண்ட போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.


வீடியோவில் உள்ள அந்த பெண்ணின் போட்டோவை வைத்து திருப்பதி முழுவதும் போலீசார் தேடினர். யாருக்காவது ஏதேனும் தகவல் தெரிந்தால் நேரில் பார்த்தால் தகவல் அளிக்கும்படி போலீசார் அறிவித்தனர். தொடர் விசாரணையில் சிறுமியை கடத்திய பெண் யார் என்பது அடையாளம் தெரிந்தது. அவர் திருமலையில் ஒப்பந்த துாய்மைப் பணியாளராக பணிபுரியும் நாகவெங்கடராமம்மா என போலீசார் அடையாளம் கண்டனர். இதையடுத்து அவர் பணி புரியும் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக அவரது அட்ரஸை கேட்டு பெற்றனர். அதன் மூலம் திருப்பதி பெத்தகாப்பு லே-அவுட்டில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார், சிறுமியை மீட்டு நாகவெங்கடராமம்மாவை கைது செய்தனர்.


பின்னர் சிறுமி தீட்ஷிதாவை அவளது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுமியை கடத்தியதற்கான நோக்கம் குறித்து நாகவெங்கடராமம்மாவிடம் போலீசார் விசாரிக்கின்றனர். இதனிடையே சிறுமி கடத்தப்பட்ட புகார் கிடைத்த சில மணி நேரத்திலேயே போலீசார் பெண் குழந்தையை மீட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பானது. இந்த செய்தி அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடைய செய்தது. இதுகுறித்த் அறிந்த திருப்பதி எஸ்.பி. ஷர்ஷவரத ராஜு துரிதமாக செயல்பட்ட போலீசாரை நேரில் அழைத்து பாராட்டினார். சிறுமியின் பெற்றோரிடம் கூடுதல் கவனத்துடன் குழந்தையை பார்த்துக் கொள்ள சொல்லி அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: திருப்பதி கோயிலில் தகராறு! கொதித்தெழுந்த அறங்காவலர் குழு உறுப்பினர்..! அதிகாரத்தில் இருந்தா என்ன வேணும்னாலும் பேசுவியா?