புதுக்கோட்டை அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் மீது அப்பள்ளியில் பயிலும் ஏழு மாணவிகள் மாணவிகள் சைல்டு லைன் அமைப்பினர் மூலம் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் திருமயம் அனைத்து மகளிர் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்து போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அடுத்த ஒத்தப்புளி குடியிருப்பு பகுதியில் செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளியில் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் 7 மாணவிகளுக்கு அப்பள்ளியில் பணிபுரியும் உதவி தலைமை ஆசிரியர் பெருமாள்(58) மீது பாலியல் குற்றம்சாட்டி சைல்டு லைனுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கையை கடித்தும் பெண் காவலரை விடாத காமூகன்... தர்ம அடி கொடுத்த மக்கள்... கண்டித்த பாஜக அண்ணாமலை!

இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல மையம் சார்பில் குழந்தைகள் நல அலுவலர்கள், பொன்னமராவதி பொறுப்பு டிஎஸ்பி குமார் மற்றும் அரிமளம் காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மாணவிகள் குற்றம் சுமத்திய பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெருமாளை காவல்துறையினர் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் மாவட்ட குழந்தைகள் நல மையம் சார்பில் குழந்தைகள் நல அலுவலர்கள் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட உதவி தலைமை ஆசிரியர் மீது புகார் கொடுத்த நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கூடுதல் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விசாரணை முடிந்த பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கவும் உள்ளனர்.
இதையும் படிங்க: கழிவறைக்குள் வைத்து பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை; அடுத்தடுத்து அத்துமீறிய 3 ஆசிரியர்கள் இரவோடு, இரவாக கைது!