அமெரிக்காவில் அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் பயன்படுத்திய பெண்ணின் முகத்தில் ஓட்டை விழுந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் போதைப்பொருளுக்கு அடிமையானர்களே அதிமாக உள்ளனர். போதைக்கு அடிமையானவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவது குறித்த செய்திகள் எவ்வளவு வெளி வந்தாலும் பலர் போதைப்பொருள் பயன்படுத்துவதை குறைத்து கொள்வதில்லை.
அந்த வகையில் தான் அமெரிக்காவில் இருக்கும் பெண் ஒருவர் அளவுக்கு மீறி போதைப்பொருளை பயன்படுத்தி கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். அமெரிக்காவின் இலினொயிஸ் மாகாணத்தில் இருக்கு சிகாகோ நகரை சேர்ந்தவர் கெல்லி கோசிரா(38).
இதையும் படிங்க: மாஜி எம்எல்ஏவை அடித்துக் கொன்ற ஆட்டோ டிரைவர்: கர்நாடகாவில் பரபரப்பு

இவர் கடந்த 2017ம் ஆண்டு நண்பர்களின் பார்ட்டியில் பங்கேற்றுள்ளார். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து அதிக போதை தரும் கொகையினை மூக்கின் வழியாக இருந்து போதையடைந்துள்ளார். நாளடைவில் கொகைன் போதைக்கு அடிமையான கோசிரா, அடிக்கடி போதை மருந்தை மூக்கின் வழியாக எடுத்து கொண்டுள்ளார்.
இந்த போதை ரூ.70 லட்சம் அளவுக்கு பணத்தை செலவு செய்து போதையாகும் அளவுக்கு சென்றுள்ளது. அதிகமாக பணத்தை செலவிட்டு போதையான கோசிரா, மது பழக்கத்துக்கும் அடிமையாகியுள்ளார். ஒருமுறை முக்கின் வழியாக கொகையினை பயன்படுத்தும் போதை நாசியின் தசைகள் கிழிந்து ரத்தத்துடன் வெளியாகியுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியான கோசிரா மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கோசிராவுக்கு முக்கின் பகுதி முழுவதுமாக சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். எனினும், இதை அலட்சியமாக எடுத்து கொண்ட கோசிரா மீண்டும் போதையை எடுத்துள்ளார். கடைசியாக கோசிராவின் முக்கில் ஓட்டையே விழுந்துள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சியான கோசிராவின் குடும்பத்தினர் அந்த பெண்ணை கண்டித்துள்ளனர். 2021ம் ஆண்டில் இருந்து சிகிச்சை எடுத்து வரும் கோசிராவுக்கு முகத்தில் மட்டும் இதுவரை 15 அறுவை சிகிச்சைகள் செய்துள்ளனர். அவரது உடம்பில் இருந்து தோல் எடுக்கப்பட்டு நாசி பகுதியில் வைத்து மறு வடிவமைப்பு சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த பாதிப்பில் இருந்து குணமடைந்து வரும் கோசிரா, தன்னை போல் யாரும் போதைக்கு அடிமையாகிட கூடாது என்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். கோசிராவின் கதையை படிக்கும் நெட்டிசன்ஸ், பட்டா தான் சில பேருக்கு புத்தி வரும் போல என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலன் கொலை.. இருமல் மருந்தில் பூச்சிமருந்து கலந்து கொன்ற காதலி.. உள்ளாடைகளிலும் தெளித்து பழிவாங்கல்..!