இளம் வயதிலேயே தனது ஆன்மீக சொற்பொழிவு பேச்சால் உச்சத்திற்கு சென்றவர் நித்தியானந்தா.
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்தியானந்தாவை கைது செய்ய போலீசார் முயற்சி செய்ததைத் தொடர்ந்து அவர் இந்தியாவை விட்டு வெளியேறினார். தென் பசிபிக் கடலில் உள்ள தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அவர் அத்தீவுக்கு கைலாசா என்று பெயர் வைத்து அங்கேயே தங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அத்தீவை ஆட்சி செய்வதாக கூறிய நித்தியானந்தா, அங்கிருந்தே சொற்பொழிவு ஆற்றிவந்தார்.

இதற்கிடையே, கடந்த 2002ம் ஆண்டு நித்தியானந்தா நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால், இத்தகவலை மறுத்த நித்தியானந்தா 27 டாக்டர்கள் தனக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், விரைவில் பரிபூரண நலம் பெற்று திரும்புவேன் என்றும் கூறியிருந்தார். அதன்பிறகு, கடந்த சில ஆண்டுகளாக வீடியோ எதிலும் நித்தியானந்தா தோன்றவில்லை. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: தனிக்காட்டு ராஜா நித்யானந்தா இறந்துவிட்டார்..? உண்மையை போட்டுடைத்த சீடர்..!
நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் காணொலி காட்சி மூலம் ஆற்றிய ஆன்மிக சொற்பொழிவில், ‘‘இந்து தர்மத்தை காப்பதற்காக நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டார்’’ என கூறி உள்ளார். இதனால் நித்தியானந்தாவின் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உண்மையில் நித்தியானந்தா இறந்துவிட்டாரா? அல்லது போலீஸ் வழக்கில் இருந்து தப்பிப்பதற்கான அவரின் புதிய யுக்தி இதுவா? என சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை உண்மையிலேயே நித்தியானந்தா இறந்திருந்தால், அவருடைய ரூ.4 ஆயிரம் கோடி சொத்துகளுக்கு யார் அதிபதி என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக கைலாசா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “இந்து மதத்தின் உச்சப் போதகர் நித்யானந்தா இறந்துவிட்டதாக இந்துத்துவ வெறுப்பு ஊடகங்கள் வேண்டுமென்றே தீங்கிழைக்கும் விதமாக குற்றவியல் ரீதியாக தகவல்களை பரப்பி வருகின்றன.
நித்யானந்தா மிகவும் ஆரோக்கியமுடனும் பாதுகாப்புடனும் சுறுசுறுப்புடனும் இருக்கிறார். மார்ச் 30-ஆம் தேதி உகாதி பண்டிகையை ஒட்டி, நித்யானந்தா நேரலையில் தோன்றி அனைத்து இந்து பக்தர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நித்யானந்தாவை இழிவுபடுத்தவும், தீங்கிழைக்கவும் மேற்கொள்ளப்படும் இந்த அவதூறு பிரச்சாரத்தை கைலாசா சந்தேகத்திற்கிடமின்றி கண்டிக்கிறது. மேலும், இந்த செய்தியால் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான இந்து பக்தர்களின் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளது. பல ஊடகங்களிலும் ஒரே நேரத்தில் இந்த செய்தியை வெளியிடுவதன் மூலம், நித்யானந்தாவுக்கு எதிராக ஒரு உத்தியை கையாளுகின்றனர்.
இந்து விரோத சக்திகளால் நித்யானந்தா மீது 70-க்கும் மேற்பட்ட கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. நேரடி தாக்குதலால் தோல்வியடைந்தவர்கள், தற்போது மறைமுகமாக வதந்திகளை பரப்ப ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள். நித்யானந்தா உயிரிழந்தாக வெளியாகும் செய்தியை இந்து விரோத சக்திகள், கொண்டாடுவது அவர்களின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்தி காட்டுகிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நித்யானந்தா அதில், '' நான் நன்றாக இருக்கிறேன். இந்துக்களின் எதிரிகள், இந்த் வெறுப்பாளர்கள் அவர்களது பொன்னான நேரத்தை வீணாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். நான் யாருக்கும் தீமை ஏற்படுத்தியது கிடையாது. நான் இப்போது நிறைய நாட்கள் வாழ முடிவு செய்து விட்டேன். மவனுங்களா சும்மா இருந்திருந்தால், 126 வயதோட நான் பாட்டுக்கு பேக் செய்துிளம்பி விடலாம் என நினைத்து இருந்தேன். வீனாய்ப்போன நாய்ங்க ஏகப்பட்ட டைமை வேஸ்டு செய்து விட்டார்கள். மவனுங்களா இதுக்கு மேல தொடர்ந்து வம்பு செய்தால் 1000 வருஷம் ஆக்கிடுவேண்டா. வேணாம். வம்பு செய்யாதீர்கள்'' என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: கைலாசாவை விரிவுபடுத்த தில்லாலங்கடி: பொலிவியாவில் 4.8 லட்சம் ஏக்கரை அபகரித்த நித்யானந்தா..!