கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ரட்டி கள்ளி மசூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் சுவாதி. வயது 22. தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். நிகழ்ச்சி நாள் அன்று மர்மமாக இறந்து போன சுவாதியின் உடல் பதேபூர் கிராமத்தில் உள்ள துங்கபத்ரா ஆற்றில் மிதந்தது.

சுவாதி ஏற்கனவே மார்ச் மூன்றாம் தேதி அன்று காணாமல் போய்விட்டார். அதைத் தொடர்ந்து அந்த உடல் சுவாதி தான் என்பது குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டது. பிரேத பரிசோதனையில் சுவாதி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: மாணவிகளை விடாமல் துரத்திய கும்பல்... ஹோலி பண்டிகையில் நடந்த சோகம்!!
அதைத்தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் நயாஸ் என்ற வாலிபரை கைது செய்தனர். சுவாதியும் நியாசும் நீண்ட கால நட்பில் இருந்து வந்ததாக போலீஸ் சரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுவாதியை திருமணம் செய்வதாக நயாஸ் உறுதி அளித்து இருந்திருக்கிறார்.
ஆனால் பின்னர் தனது சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால் பின்னர் மெல்ல மெல்ல சுவாதியை விட்டு அவர் விலகி ச்செல்லத் தொடங்கினார். தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் உண்மையை அம்பலப்படுத்துவேன் என்று சுவாதி மிரட்டியதாகவும் அதனால் அவரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாகவும் போலீசார் நடத்திய விசாரணை தெரிய வந்தது.

இந்த வழக்கில் துர்க்காச்சாரி மற்றும் விநாயகர் ஆகிய இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் சுவாதியை ஏதோ சாக்கு போக்கு சொல்லி கீழ் துங்க பத்ரா நதிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் நயாஸ் உதவியுடன் சுவாதியை கொலை செய்ததும் தெரிய வந்தது. நயாசின் நண்பர்களான துர்காச்சாரியும் விநாயகமும் தலைமறைவாகி விட்டனர்.
இந்த கொலை பின்னர் "லவ் ஜிகாத்" விவகாரமாக மாறியது. (பிற மத பெண்களை காதலித்து மதம் மாற்றுவது லவ் ஜிகாத் என்று அழைக்கப்படுகிறது). இந்தக் கொலைக்கு கண்டறம் தெரிவித்தும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போரிலும் அந்த பகுதியில் இந்து மத அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.
பாஜக தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை, சுவாதி கொலைக்கு கண்டனம் தெரிவித்தார். மாநிலத்தின் லவ் ஜிகாத் நெட்வொர்க் செயல்பட்டு வருவதாகவும் குற்றவாளிகள் இடையே பயம் இல்லாததால் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
"சமீபகாலமாக கர்நாடக மாநிலத்தில் லவ் ஜிகாத் வலை அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குற்றவாளிகள் இடையே பயம் இல்லாதது தான் இது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன" என்றும் அதில் அவர் கூறியிருக்கிறார்.

கடுமையான தண்டனை வழங்குவதன் மூலம் மட்டுமே இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்றும் அவர் அதில் ஆலோசனை கூறியிருக்கிறார்.
"காவல்துறையினர் எந்த அழுத்தத்திற்கும் அடி பணியாமல் செயல்பட வேண்டும். மேலும் இது போன்ற செயல்களை ஆதரிப்பவர்கள் உட்பட பொறுப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இருப்பினும் அதிகாரிகள் பெரும்பாலும் இது போன்ற வழக்குகளை தீவிரமாக கையாளத் தவறி விடுகிறார்கள். இதனால் அவை பொதுமக்களின் நினைவில் இருந்து மறைந்துவிடும்" என்றும் அறிக்கையில் அவர் கூறியிருக்கிறார்.
படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்களின் பாதுகாப்பு மோசம் அடைந்து வருவதாகவும், பொம்மை குற்றம் சாட்டினார்.

அதிர்ச்சியூட்டும் வகையில் காதல் என்ற பெயரில் இளம் பெண்கள் ஏமாற்றப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நேஹா ஹிரேமத் கொலை மக்கள் மனதில் இருந்து மறைவதற்கு முன்பு சுவாதி கொலையுடன் மற்றொரு கொடூரமான குற்றம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்கு பிறகும் முக்கிய குற்றவாளியான நயாசை பாதுகாக்க முயற்சிகள் நடந்து வருவதாக தெரிகிறது.
நயாஸ் சுவாதியை காதலிப்பது போல் நடித்ததாகவும், ஆனால் பின்னர் மத வேறுபாடுகள் காரணமாக அவளை நிராகரித்து தனது மதத்தை சேர்ந்த வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள நயாஸ் முடிவு செய்ததாகவும் பொம்மை கூறினார்.
லவ் ஜிகாத் என்ற வார்த்தையை பாஜக மற்றும் வலதுசாரி குழுக்கள் அடிக்கடி பயன்படுத்தி வருகின்றன.
முஸ்லிம் ஆண்கள் இந்து பெண்களை திருமணம் மூலம் மதமாற்றத்திற்காக உறவுகளுக்குள் ஈர்க்கிறார்கள். இருப்பினும் 2020 ஆம் ஆண்டில் லவ் ஜிகாத் இருப்பதை ஆதரிக்கும் ஆதாரங்களை எந்த ஒரு மத்திய புலனாய்வு அமைப்புகளும் கண்டுபிடிக்கவில்லை என்று சமீபத்தில் மத்திய அரசு கூறியிருந்தது.
இதையும் படிங்க: 'கோடி'கள் கேட்டு கர்நாடக அரசை மிரட்டும் எம்எல்ஏக்கள்.. துணை முதல்வர் சிவகுமார் அதிர்ச்சி தகவல்..!