கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் அதே ஊரைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் நட்பாக பழகி உள்ளார். நாளடையில் மாணவியும், அந்த மாணவரை மனதார நம்பி, அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் மாணவி, இரவு வீட்டிலிருந்து உள்ளார். அப்போது அந்த 12-ம் வகுப்பு மாணவன், மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளான்.

அப்போது அந்த மாணவிக்கு, தான் மறக்கவே முடியாத அளவில், அவருக்கு பரிசு வாங்கி வைத்துள்ளதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். அதனை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றால் மாணவியை அருகில் உள்ள சோளக்காட்டிற்கு தனியாக வருமாறு அழைத்துள்ளார். மாணவியும் நம்முடன் நன்றாக பேசும் நண்பர் தானே, மேலும் அதே ஊரைச் சேர்ந்தவர் தானே என்று மாணவரை நம்பி சோளக்காட்டிற்கு இரவில் தனியாக சென்றுள்ளார். இந்நிலையில் சோளக்காட்டிற்குள் சென்றவுடன், மாணவியை 12 ஆம் வகுப்பு மாணவன் பரிசு தருவதாக கூறி, மறைவான பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மேலும் இரண்டு வாலிபர்கள், 12-ம் வகுப்பு மாணவனுடன் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்ய முயற்சித்துள்ளனர்.
இதையும் படிங்க: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அத்துமீறிய 56 வயது கோயில் பூசாரி..!!

இதனால் பயந்து போன மாணவி கத்தி கூச்சலிட்டுள்ளார். தன்னை காப்பாற்ற யாரவது வருமாறு கதறியுள்ளார். அவரது கூச்சல் கேட்டு அருகில் இருந்து பொதுமக்கள் யாராவது வந்தால் தாங்கள் மாட்டிக் கொள்வோம் என அவர்கள் மூன்று பேரும் பயந்து போயினர். உடனே மாணவியை பயப்படுத்தி அமைதியாக, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை மிரட்டியுள்ளனர். மாணவி அவர்களது மிரட்டலுக்கு அஞ்சாமல் மேலும் அதிகமாக கத்தி கூச்சலிட்டுள்ளார். செய்வதறியாது திகைத்த வாலிபர்கள், மாணவியின் கழுத்தை அறுத்தால், சப்தம் வெளியே வராது என திட்டம் தீட்டி, அவரது கழுத்தை அறுத்துள்ளனர்.

அதற்குள் மாணவியின் அபாய குரல் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அங்கே வர துவங்கினர். அருகில் இருந்தவர்கள் வருவதைக் கண்ட மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கழுத்தில் படுகாயத்துடன் இரத்த வெள்ளத்தில் இருந்த மாணவியை மீட்ட அக்கம்பக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், திண்டுக்கல் மாவட்டம் குச்சிலியம்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு அவசர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த பாலவிடுதி போலீசார் 12ஆம் வகுப்பு மாணவனை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பியுடைய இரண்டு பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமியிடம் சொந்த தாய் மாமனே அத்துமீறிய அவலம்..! குட் டச், பேட் டச் நிகழ்ச்சியில் வெளிவந்த அதிர்ச்சிகர உண்மை..!