கோவையில் நடைபெற்ற "தமிழீழமும் திராவிடர் இயக்கமும்" என்ற கருத்தரங்கில் பேசிய திவிக தலைவர் கொளத்தூர் மணி, “சீமான் ஒரு மடையன்” என பேசியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாடு தனிநாடு அரசியல் நீண்ட ஆண்டுகளாக நடந்து வருகிறது. வரலாறு தெரிந்தவர்களுக்கு பேசியாவது புரிய வைக்கலாம். கிளிகளுக்கு பேச கற்றுகொடுக்கலாம், குருவிகளுக்கு கற்றுகொடுக்க முடியுமா?.நீதிகட்சியில் பெரிய அறிஞர்கள் எல்லாம் இருந்தார்கள் சாதாரனமாக சொல்லிவிட முடியாது என்றார். சீமான் ஒரு மடையன், மணியரசன் என்பவர் ஆபத்தான அயோக்கியன். சீமான் சினிமா இருந்தவர் அப்படி பேசுவார் நடிகர் என்றால் நடி, இயக்குநர் என்றால் படி என்பது போல என சகட்டுமேனிக்கு சாடினார். பெரியார் எங்கு பேசினார் தமிழர் காட்டு மிராண்டி என்று. பார்பனர் சேர்ந்து தமிழ் மாநாடு நடத்தினார்கள், அவர்கள் தங்களை தமிழர்களாக நிறுவிக் கொள்வதற்கான முயற்சி. அப்போது தான் பெரியார் அவர்களை திராவிடன் என்று சொல்ல சொல்லி பேசினார்.

விடுதலை புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாடு, தனி மனித ஒழுக்கம் குறித்து, அவர்கள் எதிர்த்து போரடியவர்கள் புத்தகம் எழுதியுள்ளனர். புலிகள் போல கட்டுப்பாடான ஒழுக்கான படை உலகில் இல்லை. மது இல்லாத இராணுவ படை.தனிமனித ஒழுக்கம் இல்லாத இவர் தான் பிரபாகரன் பிள்ளையா? எதற்காக பெரியார் அவருக்கு எதிரி? எந்த வகையில் பெரியார், பிரபாகரன் எதிரான சித்தனை கொண்டவர்கள்? இல்லையென்றாலும் அவ்வாறு நிறுத்த முயற்சிக்கிறார்கள்.
இதையும் படிங்க: “கொஞ்ச நஞ்சா பேச்சா பேசுன” - சைலண்ட்டாக சீமான் ஜோலியை முடித்த பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு - நாதகவிற்கு அடுத்த ஆப்பு!

பெரியார் 1973ல் பேசிய கடைசி கூட்டத்தில் கூட தமிழ்நாடு விடுதலை குறித்து பேசினார். பெரியார் பற்றி பேசுகிறீர்களே பெரியாரை படிக்கிறீர்களா என எச்.ராஜா விடம் கேட்ட போது பெரியாரை படிக்கவில்லை, மணியரசை படிக்கிறேன் என கூறினார்.
இப்போது ஈழ தமிழர்களை ஒருவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். பைத்தியக்காரனுக்கு கல் ஊற்றிக் கொடுத்தது போல் பேசுகிறார். பிரபாகரனை தான் அறிமுகபடுத்தினேன் என கூறுகிறார். அதற்கு முன்னாடி யாருக்குமே தெரியாதா? கட்டுநாயக்க விமானத்தில் புலிகள் தாக்கியது. 30, 40 விமானம் அழிக்கப்பட்டது, பொதுமக்கள் மரணம் இல்லாமல் நடந்த இச்சம்பவம், நியூயார்க் டைம்ஸ் எழுதினார்கள், சீமான் சொல்லி தான் எழுதினார்களா? 1994 ல் உலக நாடுகள் அவரை பேட்டி எடுத்தது என சரமாரியாக கேள்விகளை அடுக்கியுள்ளார்.
இதையும் படிங்க: கரும்புலி என காட்டி ஏமாற்றி பணம் பறித்த சீமான் ஒரு மன நோயாளி..! கொந்தளிக்கும் கொளத்தூர் மணி..!