முருகனின் அறுபடை வீடுகளில் ஏழாம் படை வீடான மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தினம் தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் 2013 ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
தற்போது குடமுழுக்கு விழா நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்
குடமுழுக்கு விழா செய்வதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி 20ஆம் தேதி கோயிலுக்கு பாலாலயம் செய்யப்பட்டு குடமுழுக்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இறுதி கட்டத்தை எட்டியுள்ள திருப்பணிகள், இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை 8.45 மணிக்கு மங்கள இசை, திருமுறை பாராயானம், சிறப்பு யாகங்கள் புனித மண் எடுத்தல் மற்றும் நீராடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிக்கு மத்தியில் குடமுழக்கு விழா சிறப்பாக நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ் படித்தவர்களுக்கு வேலை இல்லையா? தமிழுக்கு இழைக்கப்படும் அநீதி.. அரசுக்கு ராமதாஸ் கேள்வி..
இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து மாலை 4 35 மணிக்கு மேல் முலைப்பாளிகள் இடுதல் கங்கணம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை புனித நிகழ்ச்சிகளை உள்ளடக்கி அடுத்தடுத்த வரும் நாட்களில் அதிகாலையில் காலையாக பூஜைகள் ஏப்ரல் 4ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

ஏப்ரல் நான்காம் தேதி ஆறாம் காலையாக பூஜையை தொடர்ந்து ஆறு மணிக்கு முதல் 6.45 மணிக்குள் பரிவார மூர்த்தி களுக்கு குடமுழுக்கும், காலை 8.30 மணிக்குள் மருந்தாச்சலம் மூர்த்தி விமானம் ஆதி மூலவர் விமானம் ராஜகோபுரம் கொடிமரம் பரிவார விமானங்களுக்கு குடமுழுக்கும், 9.05 மணிக்குள் விநாயகர், மருதாசலமூர்த்தி, பட்டீஸ்வரர், மருகாம்பிகை, வீரபாகு கரிவரதராஜ பெருமாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு மகா குடமுழுக்கு விழா நடக்கும் நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து அன்று மாலை 5:30 மணிக்கு மேல் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் அவர்களுடைய வருகையை தந்து கோவில் சிறப்பு குடமுழுக்கு விழாவை சிறப்பிக்குமாறும், பாதுகாப்பாகவும் சுவாமியின் அருளை பெறுமாறும் கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: அடமான கடன் வழங்க லஞ்சம்! கையும் களவுமாக பிடிபட்ட அதிகாரிகள்...