ரயில்வே பாலம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார்.
தேனி நகரத்திலிருந்து மதுரை செல்கின்ற தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே ஆர்ஓபி பிரிச்சு கட்டப்பட்டு, கடந்த ஆட்சியிலேயே டெண்டர் விடப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இன்னும் பணி ஆமைகளை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த பகுதியிலே முக்கியமான பகுதியாக இருப்பதனால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விரைந்து பணியை முடித்து மக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஓ.பன்னீர்செல்வம் நெடுஞ்சால அமைச்சராக பணியாற்றியவர். அவர் கேட்ட அந்த கேள்வியையே மனதிலே எடுத்துக்கொண்டு அதற்குரிய கடிதங்கள் மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டு, அந்த பணி விரைந்து செய்வதற்கு அரசு முயற்சிக்கும் என்றார்.

இதையும் படிங்க: அதிமுகவில் மீண்டும் OPS, சசிகலா? எடப்பாடியின் அடுத்த நகர்வு!
திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் திருச்செங்கோடு- பள்ளிபாளையம் சாலையில் இருக்கிற தோக்கவாளியிலிருந்து, திருச்செங்கோடு சங்ககிரி சாலையில் இருக்கிற பால்மடை வரை புறவழிச்சாலை தேவை என்று பலமுறை கேட்டிருக்கின்றோம். தற்போதைய நிதிநிலை அறிக்கையில் இந்த ஆண்டு அந்த பணிகளை துவக்குவதற்கு அமைச்சர் முன்வருவாரா? என இ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார். திருச்செங்கோடையை பொறுத்த அளவுக்கு சுற்றி, சுற்றி நிறைய சாலைகள் அமைக்கப்பட்டுவிட்டன, தற்போது கூட ஒரு புறவழிச்சாலை பணி சென்றுகொண்டிருக்கிறது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு இன்னொரு சாலை வசதி வேண்டும் என கோரிக்கை வந்தது. தற்போது அதற்கான பணிகள் நடந்து வருகின்றது என அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்தார்.

சேலம் மாநகரைச் சுற்றி 45 கி.மீ நீளத்திற்கு சுற்றுச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வில் உள்ளது. பாமக எம்.எல்.ஏ. அருள் கேள்விக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய நெடுஞ்சாலைக் கோட்டம் அமைக்கப்படுமா என அதிமுக எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். “இந்த ஆண்டே இது தொடர்பாக ஆய்வு நடத்தி, புதிய கோட்டம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
இதையும் படிங்க: வன்முறையின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறப்போகுது.. எச்சரித்த ஓபிஎஸ்..!