பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகக்குழு கூட்டம் கூடியது. முக்கிய முடிவுகள், செயல்திட்டங்கள் தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், உட்கட்சி பூசலால் கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்த விவகாரம் முக்கிய இடம் பிடித்துள்ளது.

பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த போதும் நிர்வாக குழு மேடையில் துரை வைகோ அமர்ந்திருந்தார். மேடையில் போட்டுள்ள கடைசி இருக்கையில் மல்லை சத்யா அமர்ந்திருந்தார். இந்த நிர்வாக குழு கூட்டத்தில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பதவிப்பறிப்பா? என்ன முடிவுனாலும் ஏத்துக்குறேன்! வைகோவிடம் பணிந்த மல்லை சத்யா..!

இலங்கை ராணுவத்தோடு பிரதமர் நரேந்திர மோடி ராணுவ ஒப்பந்தம் செய்திருப்பதற்கு கண்டனம்., தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதலமைச்சருக்கு பாராட்டுக்கள், தமிழ்நாட்டில் ஜாட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும், தமிழக ஆளுனரை கண்டித்து வரும் 26ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, சென்னை,திருச்சி,கோவை, மதுரை ஆகிய மண்டலங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சேனாதிபதி என விசுவாசம் காட்டிய அந்த 'ஒருவர்'..! விளாசிய துரை வைகோ..!