திமுக குறித்த விமர்சனத்திற்கு மூத்த அமைச்சர் பொன்முடி உடனடி பதிலடி கொடுத்துள்ளார்.
சுடத்தெரியாதவர்களுக்கு பயிற்சி:
விழுப்புரம் மாவட்ட ஊராட்சி முகமை அலுவலகத்தில் வன அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் வனத்துறை அரசு தலைமை செயலாளர் செந்தில்குமார், முதன்மை வன அலுவலர் ஸ்ரீனிவாஸ் ராவ் ரெட்டி, முதன்மை தலைமை வனபாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரி பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா, முதன்மை தலைமை வன பாதுகாவலர் தெபாஷீஷ் ஜனா, உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வனத்துறை அமைச்சர் பொன்முடி, வனவிலங்குகளை பாதுகாப்பது, வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கபட்டதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: “ஒரு துண்டு சீட்டு கொடுக்க முடியல” - தவெக புள்ளைங்கோவுக்காக பொங்கிய விஜய்!

வனவிலங்கு பட்டியலில் உள்ள காட்டுப்பன்றிகள் 3 கிலோ மீட்டருக்கு அப்பால் வந்தால் சுடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வனத்துறை இல்லாத பகுதிகளில் காட்டுப்பன்றி வந்தால் கிலோ மீட்டர் கணக்கில் வராது. மாநில அளவில் 28 ஆம் தேதி சுட தெரியாத வன அலுவலர்களுக்கு துப்பாக்கியால் சுடுவதற்கு கோயம்புத்தூரில் பயிற்சி அளிக்கபட உள்ளது எனத் தெரிவித்தார்.
திமுகவை விமர்சித்த விஜய்:
இன்று பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடி வரும் குழுவினரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்தார். அப்போது உரையாற்றிய அவர், நமது ஆட்சியாளர்களுக்கு ஒரு சில கேள்விகள். நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது எட்டு வழி சாலையை எதிர்த்தீர்கள். காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டைத்தானே இங்கேயும் எடுக்கணும். அது எப்படி நீங்க எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு. அதே ஆளுட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா? எனக்கு புரியலையே... அதனால இனிமேலும் சொல்றேன். உங்கள் நாடகத்தை எல்லாம் பார்த்துக் கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் “நீங்கள் உங்க வசதிக்காக அவங்களோடு நிற்கிறதும், அவங்களோட நிக்காம போறதும்... நாடகம் ஆடுவதும், நாடகம் ஆடாமல் இருப்பதும்... அது சரி, நம்புகிற மாதிரி நாடகம் ஆடுவதில் தான் நீங்கள் கில்லாடி ஆச்சே. விவசாயிகள் போராட்டம் நடத்தினால் பிரச்சனை தான். அதனால இனிமே உங்க நாடகத்தை பார்த்துக் கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்” என்று எச்சரித்தார்.
அமைச்சர் பொன்முடி பதிலடி:
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழக அரசும் மாநில அரசும் இணைக்கமாக செயல்படுவதாக நாடகம் போடுவதாகவும் விமர்சித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, “அவர் வாய்க்கு வந்ததை எதையாவது பேசிக்கொண்டு இருப்பார் என்றார்.
இதையும் படிங்க: 'நம்புகிற மாதிரி நாடகம் ஆடுவதில் நீங்கள்தான் கில்லாடி ஆச்சே...' திமுகவை அட்டாக் செய்த விஜய்..!