சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று உரை நிகழ்த்தினார். மாநில அரசுகளின் உரிமையை மத்திய அரசு பறிப்பதாகவும், மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுவதாகவும், மத்திய அரசு அதிகாரத்தை குறைப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் நீட் தேர்வு, தொகுதி மறு வரையறை, ஹிந்தி திணிப்பு உள்ளிட்டவைகள் குறித்து சட்டசபையில் முதலமைச்சர் பேசினார். இந்த நிலையில் முதலமைச்சரின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிங்க: முதல்முறையாக சட்டசபையில் நயினார் நாகேந்திரன்.. சபாநாயகர், எம்எல்ஏக்கள் வாழ்த்து மழை..!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எது சரி எது தவறு என்பதை பேசி முடிவெடுப்பதை தவிர்த்து ஒட்டுமொத்தமாக சுயாட்சி என்பதை ஏற்க முடியாது என தெரிவித்தார். மாநில சுயாட்சியால் மாநிலத்தின் வலு குறையும் என்றும் முதலமைச்சரின் அறிவிப்பு சரியானதல்ல என்றும் கூறினார். மேலும், காவிரி, நீட், ஜிஎஸ்டி தீர்மானங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் தான் ஜி.எஸ்.டி. கொண்டுவரப்பட்டதாக தெரிவித்த நயினார் நாகேந்திரன், மும்மொழி கொள்கையை திணிக்கவில்லை என கூறினார். தமிழகத்தில் தெலுங்கு பேசுவோர் அதிக அளவில் உள்ளதாகவும், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தெலுங்கு பேசுவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொன்முடி பேச்சை மனதில் நிறுத்துங்க.. 2026இல் ஓட்டை பாஜகவுக்கு போடுங்க.. தெறிக்கவிடும் நயினார்..!