தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. இந்த தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர். ஏப்ரல் 15-ந் தேதி வரை தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று வாழ்த்து கூறியிருந்தார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அன்புத் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் எனக்கூறியிருந்தார்.

ஆனால் இன்று தமிழக் வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டத்தால் அரங்கேறிய சம்பவத்தை பார்த்த நெட்டிசன்களோ, வாழ்த்து கூறினால் மட்டும் போதாது கொஞ்சம் அடிப்படை அறிவும் இருக்கனும் என தவெக தலைவரை விளாசி வருகின்றனர். இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஆண்ட கட்சியான அதிமுக, ஆளும் கட்சியான திமுகவிற்கு டப் கொடுக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக பொதுக்குழுவிற்கு தவெக ஏற்பாடு செய்துள்ளது. வாழை, தோரணங்கள், கட்சிக் கொடிகள், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என்று ஆடம்பரம் காட்டியுள்ளனர். அதுபோன்ற 10 குதிரைகளில் வீரர்கள் தவெக கொடியுடன் அணிவகுத்து நின்று விஜயை வரவேற்றனர். மண்டபத்தில் நுழைவு வாயில் கோட்டை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வாயிலின் இருபுறமும் 2 செயற்கை யானைகள் தத்ரூபமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: எதிர்வரும் தேர்தலில் TVK - DMK இடையே தான் போட்டி.. பொதுக்குழு மேடையில் வெளுத்து வாங்கிய விஜய்..!

இப்படியெல்லாம் பிரம்மாண்டத்திற்கு மத்தியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கிட்டத்தட்ட 2500 பேர் பங்கேற்றனர்.இதனால் காலை 8 மணி முதலே திருவான்மியூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தவெகவினர் சாரை சாரையாய் வாகனங்களில் படையெடுத்ததால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். காலை 8 மணியில் இருந்தே வாகனங்கள் நத்தை வேகத்தில் ஊற ஆரம்பித்ததால் வழக்கமாக பணிக்குச் செல்வோரும் கடும் ஆத்திரத்திற்கு ஆளாகினர்.

திருவான்மியூர் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் தொடர்பான வாகனங்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்களின் கமெண்ட்கள் அதைவிட வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் நாளில் இப்படி காலையில் பொதுக்குழு கூட்டம் நடத்தினால் மாணவர்க பாதிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லையா? என தவெக தலைவர் விஜயை விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தவெக முதல் பொதுக்குழு கூட்டம்.. மேடையில் அமர்ந்த 8 பேர் யார்..? யார்..?