சீமான் வீட்டின் முன்பு போலீசாருடன் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் இன்று காலை சீமான் வீட்டிற்கு வருகை தந்து நோட்டீஸ் ஓட்டினர். இந்நிலையில் சீமானின் உதவியாளர் அந்த நோட்டீஸை கிழித்தார். உடனே போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் காவலர் முன்பு துப்பாக்கியைக் காட்டியதாக சீமானின் காவலாளியும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் முன்னாள் ராணுவ வீரர் என்றும், அதனால் அவரிடம் துப்பாக்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிர சோதனை நடத்தி வரும் நிலையில், இந்த பரபரப்பான சூழ்நிலையில் சீமான் வீட்டிற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் வருவார்கள் என்று கூறப்பட்டது.

தற்பொழுது சீமான் வீட்டிற்கு உள்ளே செல்வதற்காக 20க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சென்றனர். அவர்களுடன் பெண் தொண்டர்களும் சென்றனர். அவர்கள் தங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காலையிலிருந்து இந்த பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் சீமான் வீட்டிற்கு செல்ல வேண்டும் சென்று அங்கு என்ன நிலவரம் என்று பார்க்க வேண்டும் என்று கூறி காவல்துறையினர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.
இதையும் படிங்க: ஆஜராக முடியாது… என்ன செய்வீர்கள்..? போலீசாருக்கு சீமான் ஆவேசச் சவால்..!

ஆனால் காவல்துறையினர் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர் தடைகளையும் மீறி நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சீமான் வீட்டிற்குள் செல்லத் தொடங்கினர். இருபுறமும் அதாவது அந்த சந்திப்பவனி தேர்வு இருக்கக்கூடிய இருபுறமும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சென்றனர். காவல்துறையினர் தடுப்பை மீறி அவர்கள் “கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் கண்டிக்கிறோம்” என்று கோஷமிட்டவாறு சீமான் வீட்டிற்கு சென்றார்கள். காவல்துறையினர் அவர்களை எவ்வளவும் தடுத்தும் காவல்துறையின் தடுப்பையும், சீமான் வீட்டிற்கு முன்பு குவிய ஆரம்பித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடுமாவனம் கார்த்திக் போன்ற நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் சிலரும் தொண்டர்களுடன் சென்றனர். சீமான் வீட்டிற்கு முன்பு குவியத் தொடங்கிய நாதகவினர் காவல்துறையினருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது “நீங்க யாரும் பாதுகாப்பு எல்லாம் தரமாட்டீங்க சார். எனக்கு தெரியும் சார் சும்மா கேட்டு ஒரு மணி நேரமா நீங்க போன்ல கேக்குறீங்களா சார். அங்க எங்க அண்ணி தனியா இருப்பாங்க. அது தவறு இல்லையா? எங்க அண்ணிக்கு இப்ப யார் பாதுகாப்பு இருப்பாங்க? எங்களால எப்படி உங்கள நம்ப முடியும் என போலீசாருடன் கடுமையாக சண்டையிட்டனர்.
பெரியார் குறித்து அவதூறாக பேசிய வழக்கு, விஜயலட்சுமி வழக்கு என சீமான் தலைக்கு மேல் கைது கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாதகவினர் காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்டுள்ள வீடியோக்களை பார்க்கும் நெட்டிசன்கள், “சீமானை கைது செய்ய வைக்காமல் போகாமாட்டாங்க போல” என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சாரி கேட்ட சீமான் மனைவி ..! என்ன சாரி? என்று கதவை வேகமாக அடிச்ச போலீஸ்..!