உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13 முதல் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. வருகிற 26 ம் தேதி மகா சிவராத்திரி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து புனித நீராடிச் செல்கின்றனர்.
கங்கா, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்ண்டு மகா கும்பமேளாவௌ பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு கோலாகலமாக நடத்தி வருகிறது.
தற்போது வரை 30 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வந்து சென்றதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. கும்பமேளாவில் 6 நாள்கள் விஷேசமாகக் கருதப்படுகிறது. அதில் ஒன்று தான் வசந்த பஞ்சமி.
இதையும் படிங்க: கும்பமேளா நெரிசலில் 30 பேர் பலி: பொதுநல வழக்கு தள்ளுபடி; "உயர் நீதிமன்றத்தை நாடும்படி" உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
இன்றைய நாள் வசந்த பஞ்சமி கடைப்பிடிக்கப்படுகிறது. மாதந்தோறும் வளர்பிறையில் ஐந்தாம் நாளாகவும், தேய்பிறையில் ஐந்தாம் நாளாகவும் பஞ்சமி திதி வருகின்றது. முக்கியமாக கருட பஞ்சமி, ரிஷி பஞ்சமி, வசந்த பஞ்சமி மூன்றும் பிரசித்தி பெற்றவை. இதில் தை அமாவாசைக்குப் பின்வரும் பஞ்சமி வசந்த பஞ்சமியாகக் கொண்டாடுகிறது.
வசந்த பஞ்சமி வட மாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நிலையில் திரிவேணி சங்கமத்தில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
இதுவரை 36 கோடி பேர் புனித நீராடியுள்ள நிலையில், மாநில அரசு அதிகாரிகள் கூற்றுப்படி, இன்று காலை 8 மணி வரையில் சுமார் 62,25,000 பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இதன் மூலம் தற்போது வரை சுமார் 36 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்.
வசந்த பஞ்சமி அன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இதனால் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் வண்ண வண்ண பூக்கள் தூவப்பட்டது. சாதுக்கள், துறவிகள், பக்தர்கள் மீது பூக்கள் தூவப்பட்ட நிலையில் புனித நீராடிய பக்தர்களை மேலும் மகிழ்வித்தது.

பிரயாக்ராஜில் மட்டுமல்லாது வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், ராமர் ஜென்ம பூமியான அயோத்தியிலும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்த கும்பமேளா விவகாரம்...