புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் மத்திய அரசு பழி வாங்குவதாக பாராளுமன்றத்தில் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மும்மொழி கொள்கை விவகாரம் தமிழ்நாட்டு அரசுக்கும் மத்திய பாஜக அரசுக்கும் இடையே திரும்பி வாதங்களை கிளப்பி வருகிறது. மும்மொழி கொள்கையில் கையெழுத்து விட்டால் தான் தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை தொடரும் என தமிழக முதலமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் நேற்று நடைபெற்ற திமுக எம்பிக்கள் கூட்டத்தில் மும்மொழிக் கொள்கை விவகாரம் தொடர்பான கேள்விகள் எழுப்ப திட்டமிடப்பட்டன.
இதையும் படிங்க: தமிழர்கள் முட்டாள்களா..? அமித்ஷா...! தெறிக்கவிட்ட ப.சிதம்பரம்..!

இந்த நிலையில், இன்று காலை நாடாளுமன்றம் கூடியது. மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, பள்ளி நிர்வாகம் தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அப்போது பேசிய திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை கொடுக்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருவதாக கூறினார். புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்ற குற்றச்சாட்டையும் பகிரங்கமாக முன் வைத்தார்.

அப்போது குறிப்பிட்டு பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு அரசு தான் மாணவர்களை வஞ்சிக்கிறது என்றும் அரசியல் காரணங்களுக்காக பி.எம். ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசு மறுத்து வருகிறது குற்றம் சாட்டினார்.
புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் திமுக அரசு U TURN அடித்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு பி எம் ஸ்ரீ திட்டத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளது எனவும் கூறினார்.

அப்போது, தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் மக்களவையில் கடும் அமலில் ஏற்பட்டது. மேலும் தர்மேந்திர பிரதான் தனது உரையை திரும்ப பெற வேண்டும் என்றும் திமுக எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: அசைக்கக்கூட முடியாது... மத்திய அரசுக்கு அமைச்சர் பொன்முடி நேரடி சவால்...!