ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5 தேதி நடைபெற உள்ளது.
இந்த இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி மைக் சின்னத்தில் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 24ம் தேதி முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரையில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக அக்கட்சியின் வேட்பாளரான சீதாலட்சுமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பெரியாரை இழிவாக பேசிவிட்டு எப்படி எங்கள் பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வருகிறீர்கள்.? என வாக்கு சேகரிக்க வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியிடம் திமுக பெண் நிர்வாகி கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி அன்னை சத்யா நகர் பகுதியில் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களிடமும் அவர் தனக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார்.
இதையும் படிங்க: ஓ.பி.எஸும் வேணாம்… இ.பி.எஸும் வேணாம்… திமுகவுக்கு ஜம்பாகிய செந்தில் முருகன்..!
இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவரை நிறுத்தி தனக்கு வாக்களிக்க வேண்டும் என சீதாலட்சுமி வேண்டுகோள் விடுத்த போது, வாகனத்தில் வந்த அந்த பெண் பெரியாரைப் பற்றி பேசிவிட்டு எப்படி இந்த பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வருகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அப்போது குறிக்கிட்டு பதிலளித்த வேட்பாளர் சீதாலட்சுமியின் தன் கணவர் பெரியாரைப் பற்றிய ஆயிரம் புத்தகங்கள் தனது வீட்டில் இருப்பதாகவும், அதைப்பற்றி பேசுவதற்கு இது உகந்த இடம் இல்லை என்றும் கூறினார். மேலும் இதுதொடர்பாக தேர்தலுக்குப் பிறகு நானே உங்கள் வீட்டிற்கு வந்து விளக்கம் அளிக்கிறேன் என்றார், இதைக் கேட்ட அந்த பெண்மணியும் அமைதியாக கடந்து சென்றார். வாகனத்தில் வந்த பெண் சசிகலா அந்த பகுதியின் திமுக மகளிர் அணி அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியார் பற்றி அவதூறு பேசிட்டு எங்ககிட்டயே ஓட்டு கேக்க வரியா?
சங்கி சீமான் அல்லக்கை வேட்பாளரை ஓடவிட்ட ஈரோடு மக்கள் 🔥 pic.twitter.com/gpThLikDMl
— தூய துறவி (@VSK_Talks) January 21, 2025
இதையும் படிங்க: ’இங்கு பேசாமல் எங்கு பேசுவது?’.... ஆளுநர் குறித்த பேச்சுக்கு அனுமதி மறுப்பு... வெளிநடப்பு செய்த சபாநாயகர் அப்பாவு