டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கும், திருவுருவ படத்திற்கும், பலர் மரியாதை செலுத்தி வருகின்றனர், பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

இதேபோல் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உள்ளிட்டோரும் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ படங்களுக்கும், திருவருவ சிலைக்கும் மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: யார் தான் தலைவர்? ராமதாஸ் தலைமையில் இன்று அவசர பொதுக்குழு கூட்டம்..!

இதனைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது பாமக தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: முடிவுக்கு வந்ததா அப்பா - மகன் பிரச்சனை..? நானே பாமக தலைவர்.. தூள் கிளப்பிய அன்புமணி..!