பொதுவாக ஒருவர் பட்டா வாங்க வேண்டும் என்றால் அவர் விஏஓ கோட்டாட்சியர் வட்டாட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளை சந்தித்து அதன் பிறகு அவர்களின் ஒப்புதல் உடனே பட்டா வாங்குவது போன்ற நடைமுறை இருந்து வந்தது.
இதனை எளிமையாக்கும் வகையில் தமிழக அரசு, மக்கள் இ-சேவை மையங்களில் பட்டாக்கு விண்ணப்பித்து, அதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து பிறகு ஆன்லைன் மூலமே விஏஓ அதற்கு ஒப்புதல் கொடுத்து கையொப்பமிட்டு வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியது.
இதையும் படிங்க: டெல்லியில் பாஜக வெற்றிக்கு முக்கிய 2 காரணங்கள்: "நெட்டிசன்"கள் சொல்வது என்ன?
அந்த வகையில் முதலில் ஒருவர் இ-சேவை மையம் மூலமாக பட்டா மாற்றுதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி அந்தந்த பகுதி மாநகராட்சி அல்லது கிராமமா என்பதை அறிந்து அதற்கு உரிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பத்தை பதிவு செய்து 60 ரூபாய் கட்டணம் செலுத்தி ரசீது பெற வேண்டும். அதனைத் தொடர்ந்து வியோவின் ஒப்புதலுக்கு இணங்க ஓரிரு நாட்களில் பட்டாக்கள் உரிய நபருக்கு வழங்கப்படும்.
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள பகவதிமங்கலம் கிராமத்தில் இந்த ஆன்லைன் முறையை பயன்படுத்தி விஏஓ மற்றும் இ-சேவை உரிமையாளர் கையுடலில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பட்டா மாற்றுதலுக்காக அப்பகுதியில் உள்ள இ-சேவை மையத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது விஏஓ பார்த்திபன் தனக்கு லஞ்சம் கொடுத்தால்தான் பட்டா மாறுதல் கிடைக்கும் என்று மிரட்டலில் ஈடுபட்டுள்ளார்.
முதலில் அதிக தொகை கேட்ட பார்த்திபன் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் முடிவாக 37 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்புக்கொண்டு உள்ளார். இது இது மட்டுமின்றி லஞ்ச தொகையை இ சேவை மைய உரிமையாளரிடம் கொடுத்து விடும் படி கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் தான் போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை இ-சேவை மைய உரிமையாளரிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் இ-சேவை மைய உரிமையாளரை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த தகவலை அறிந்த விஏஓ பார்த்திபன் அலுவலகத்தில் இருந்து விரைந்து சென்று தலைமறைவாகியுள்ளார்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட இ-சேவை மைய உரிமையாளர் அகமது ஜாஃபர் அலி என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தலைமறைவாகியுள்ள பார்த்திபனை லஞ்ச ஒழிப்பு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக செயல்பாடுகள் என்ன? தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்...