முய்சு கடந்த நவம்பர் மாதம் மாலத்தீவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவர் அதிபரான காலம் முதலே டெல்லி மற்றும் மாலேவுக்கு இடையேயான உறவில் விரிசல் விழ துவங்கியது. இந்திய பெருங்கடலில் அமைந்து இருக்கும் சிறிய தீவு நாடாக இருந்தாலும் மாலத்தீவு, இந்தியாவின் புவிசார் அரசியல், பாதுகாப்பிற்கு மிக முக்கியமான நாடாக உள்ளது. இதனால், மாலத்தீவை வளைத்து போட சீனா சதித்திட்டம் தீட்டி வருகிறது.
இந்நிலையில், மாலத்தீவின் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்து, கிரிமினல் கும்பலைச் சேர்த்து, அதிபர் முகமம்து முய்சுவை பதவியில் இருந்து அகற்ற இந்தியாவிடம் இருந்து 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கேட்டதாக அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள அந்தச் செய்தியில் ‘‘எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் அரசியல்வாதிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவை பதவி நீக்கம் செய்வதற்கான சதியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் இந்தியாவிடம் 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை கோரியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தத் திட்டம் நிறைவேறவில்லை’’ என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தண்ணியில கண்டம்... பிரம்மபுத்ரா நதியில் சீனா கட்டும் வல்லரசு அணை... இந்தியாவை அழிக்க இப்படியொரு சதியா..?
மாலத்தீவு நாடாளுமன்றத்தின் 40 உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்து முய்சுவை பதவியில் இருந்து நீக்க திட்டமிடப்பட்டதாகவும் அதில் சொந்தக் கட்சியைச் சேர்ந்த சிலரும் இந்த சதித்திட்டத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மாலத்தீவுகளின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத், முய்ஸுவுக்கு எதிரான அத்தகைய சதி பற்றி தனக்குத் தெரியாது என்று மறுத்ததோடு, அத்தகைய நடவடிக்கையை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
பல மூத்த இராணுவ-காவல்துறை அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து, ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து முய்ஸு வெளியேற்றப்படுவதை உறுதி செய்வதற்காக நாட்டில் உள்ள மூன்று செல்வாக்குமிக்க கிரிமினல் கும்பல்களின் உதவியைப் பெறுவதும் அடங்கும் அந்தத் திட்டத்தில் ஒன்று.
மாலத்தீவு எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், முய்சுவின் சொந்தக் கட்சி (மக்கள் தேசிய காங்கிரஸ்) உறுப்பினர்கள் உட்பட 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய வாக்களிக்க முன்மொழிந்தனர்" என்று கூறப்படுகிறது.
பல்வேறு தரப்பினருக்கு பணம் செலுத்த, சதிகாரர்கள் 87 மில்லியன் மாலத்தீவு ரூஃபியா அதாவது 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவிடம் கேட்டுள்ளதாக மாலத்தீவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
ஜனவரி 2025க்குள், இந்தியாவின் உளவுத்துறை அமைப்பான ராவுடன் தொடர்புடைய நபர்கள், மாலத்தீவு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் முய்ஸுவை அகற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயத் தொடங்கினர். பல மாதங்கள் இரகசியப் பேச்சுக்கள் நடந்த போதிலும், குற்றச்சாட்டுகளை நிறைவேற்றுவதற்கு போதுமான பாராளுமன்ற ஆதரவை சேகரிக்க முஜ்டியாமல் அந்தத் திட்டம் தோல்வியடைந்தது.
டெல்லியில் உள்ள மூத்த அரசு அதிகாரிகளால் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதா? என்பது குறித்தும், முய்சுவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு இந்தியா ஆதரவளிப்பது குறித்தும் தெரியவில்லை என அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு பெயர் குறிப்பிடாத மாலத்தீவு அதிகாரிகள் அமெரிக்க நாளிதழுக்கு இந்த தகவை கூறியுள்ளனர். இந்த செய்தி வெளியானது குறித்து மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் விளக்கமளிக்க முன் வரவில்லை.
இந்தச்செய்திக்கு பதிலளித்த மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத், மாலத்தீவில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு இந்தியா ஒருபோதும் நிபந்தனைகளை விதிக்கவில்லை. அந்தச் செய்தியை நான் ஆர்வத்துடன் படித்தேன். அதிபருக்கு எதிரான தீவிர சதி எதுவும் எனக்குத் தெரியாது. சிலர் எப்போதும் சதியில்தான் வாழ்கிறார்கள். மாலத்தீவின் ஜனநாயகத்தை அவர்கள் எப்போதும் ஆதரிப்பதால், அத்தகைய நடவடிக்கையை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது. இந்தியா ஒருபோதும் நிபந்தனைகளை விதிக்கவில்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் தேசிய காங்கிரஸின் (பிஎன்சி) தலைவரும், சீன சார்பு தலைவருமான முய்சு, இந்த ஆண்டு ஏப்ரலில் மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். 93 உறுப்பினர்களைக் கொண்ட சபைக்கு நடைபெற்ற தேர்தலில், முய்சுவின் கட்சி 86 இடங்களில் போட்டியிட்டு 66 இடங்களைக் கைப்பற்றியது.
இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகள் கடந்த சில ஆண்டுகளாக சிக்கலில் உள்ளன. கடந்த நவம்பரில், முய்ஸு பதவியேற்றது, முதல் சீனாவின் செல்வாக்கு அங்கு அதிகரித்து வருகிறது.
"இந்தியா அவுட்" திட்டத்தின் கீழ் முய்ஸு ஆரம்பத்தில் மூன்று விமானங்களை இயக்குவதற்காக மாலத்தீவில் நிறுத்தப்பட்டுள்ள 80 இந்திய இராணுவ வீரர்களை திரும்பப் பெற அழைப்பு விடுத்தார். ஜனவரியில், முய்ஸுவின் முன்னாள் பிரதிநிதிகள் மூவரால், பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி எரிச்சலூட்டும் கருத்துக்கள் வெளியிடப்பட்டபோது, நிலைமை மேலும் மோசமடைந்தது.
இந்த ஆண்டு அக்டோபரில் அதிபர் முய்ஸுவின் ஐந்து நாள் இந்தியா பயணத்தின் போது நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. உறவுகளை சரிசெய்யும் முயற்சியில், அவர் இந்தியா-மாலத்தீவு உறவுகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். மாலத்தீவின் சமூக-பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் இந்தியாவின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார்.
"மாலத்தீவின் சமூக-பொருளாதார, உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இந்தியா முக்கிய பங்குதாரராக உள்ளது. தேவைப்படும் காலங்களில் எங்களுக்கு ஆதரவாக உள்ளது" என்று பிரதமர் நரேந்திர மோடியுடனான இருதரப்பு சந்திப்பிற்குப் பிறகு அதிபர் முய்ஸு கூறினார்.
இதையும் படிங்க: டிரம்ப் கொடுத்த‘ட்ரம் கார்டு’... சீனாவை 5 பக்கமும் அதிர வைக்கக் காத்திருக்கும் இந்தியா..!