டிஜிட்டல் மயமாக மாறி வரும் இந்தியாவில், நாள்தோறும் விதம் விதமான நூதன மோசடிகள் அரங்கேறி வருகின்றன. சமூக ஊடகங்களை பயன்படுத்தி சைபர் ஊழல் குற்றவாளிகள் இந்த மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பீகாரில் நடைபெற்றுள்ள இந்த ஊழல் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
பீகார் மாநிலம் நவாடா மாவட்டம் நார் டிகன்ஸ் அருகிலுள்ள காபூரா எந்த கிராமத்தில் இந்த மோசடி புகார் பதிவாகி இருக்கிறது.
இதையும் படிங்க: ‘இந்தியா கூட்டணி’ மக்களவைத் தேர்தலோடு முடிந்துவிட்டது: தேஜஸ்வி யாதவ் வெளிப்படை
இந்த இந்த கும்பல் சமூக ஊடகங்கள் மூலம் ஆண்களுக்கு வலை வீசும் விதத்தில் வசீகரமான விளம்பரங்களை பதிவு செய்வார்கள். "அகில இந்திய கர்ப்ப சேவை பணி" என்ற பெயரில் ஆசை காட்டும் விளம்பரங்கள் வெளிவரும்.

அதாவது, குழந்தை பேறு இல்லாத இளம் பெண்களுக்கு குழந்தை வேண்டுமென்று எங்களிடம் பதிவு செய்து இருக்கிறார்கள். இளமையும் ஆரோக்கியமும் நிறைந்த ஆண்கள் இந்த சேவைக்கு முன் வந்தால் 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும். என்பதுதான் அந்த ஆவலை தூண்டும் விளம்பரம்.
இதைப் பார்க்கும் இளைஞர்களுக்கு சொல்லவும் வேண்டுமா!? கரும்பு தின்ன கூலியா!? என்ற நினைப்பில் போட்டி போட்டு விண்ணப்பங்களை அனுப்பினார்கள். இனிதான் இருக்குது ட்விஸ்ட்.

விண்ணப்பதாரர்களில் வசதியானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடமிருந்து ஆதார் கார்டு, பான் கார்டு, புகைப்படங்கள் ஆகியவற்றை பெற்றுக் கொள்வார்கள். அதன் பின் நட்சத்திர ஹோட்டல்களில் அறைகளை முன் பதிவு செய்ய வேண்டும் கூறி அதற்காக கணிசமான அளவு பணத்தை வசூலித்து வந்து இருக்கிறார்கள்.
இதில் மற்றொரு நூதன அம்சம் என்னவென்றால், இந்த சேவையில், பெண்களுக்கு பிள்ளை பாக்கியம் கொடுக்க முடியாத இளைஞர்களை வெறும் கையோடு அனுப்பி விடமாட்டோம் என்றும், 10 லட்சம் ரூபாய்க்கு பதிலாக ஆறுதல் பரிசாக 50,000 ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் விளம்பரம் செய்து இருந்தது தான் உச்சம்.

ஆசை ஆசையாய் போட்டி போட்டுக் கொண்டு பணம் அனுப்பிய இளைஞர்கள், எப்போது நட்சத்திர ஹோட்டலுக்கு வர வேண்டும் என்று கேட்பதற்காக போன் செய்த போது தான் அவர்கள் மோசடி பணத்துடன் ஊரை காலி செய்து விட்டார்கள் என்ற அதிர்ச்சி தகவல் அவர்களுக்கு தெரிய வந்தது.
இது பற்றிய புகாரை தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு இம்ரான் பர்வேஸ் தலைமையில் தீவிர விசாரணை நடத்தி மோசடி கும்பலைச் சேர்ந்த பிரின்ஸ் ராஜ், போலா குமார், மற்றும் ராகுல் குமார் ஆகிய மூன்று பேர்களை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது
இதையும் படிங்க: சைபர் குற்றங்களை தடுக்கும் போலீஸ் புலிகள் ..முன்னால் டிஜிபி .!