தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வர துவங்கி உள்ளன. கிருஷ்ணகிரியில் கடந்தாண்டு போலி என்.சி.சி., முகாமில் 12 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளி அதே பள்ளியில் வேலைபார்த்த என்.சி.சி வாத்தியார் சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு இறந்தார். அதேபோல் பர்கூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 13 வயது மாணவியை அதேபள்ளியை சேர்ந்த 2 ஆசிரியர்கள் கூட்டு பலாத்காரம் செய்த விவகாரம் பூதாகரமானது. ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ், ஆகியோர் கடந்த 5ம் தேதி கைதாகினர்.

கடந்த மாதம் ஓசூரை சேர்ந்த 11 வயதான ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதே பள்ளியை சேர்ந்த ஒன்பது, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவன் என, மூன்று பேர் கைதாகினர். மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வெளியாட்கள் மட்டுமன்றி உடன்படிக்கும் மாணவர்களே இத்தகைய கொடூரத்தை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: காதலனை போக்சோ வழக்கில் சிக்க வைத்த பெண்ணின் குடும்பம்...விடுதலை செய்த உயர் நீதிமன்றம்

மாணவிகளுக்கு மட்டுமல்ல மாணவர்களுக்கும் இதேபோல் பாலியல் தொல்லை அளிக்கபடுவதாக எழும் குற்றச்சாட்டுகள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரியில் 10ம் வகுப்பு மாணவருக்கு, ஆங்கில ஆசிரியர் உசேன் பாலியல் தொந்தரவு அளித்த நிலையில் அவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் நாடோடிகளாக வாழ்ந்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த 3ம் வகுப்பு மாணவியிடம் 11 ஆம் வகுப்பு மாணவன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. சிறுமிக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காதலனை போக்சோ வழக்கில் சிக்க வைத்த பெண்ணின் குடும்பம்...விடுதலை செய்த உயர் நீதிமன்றம்