நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் , திரைப்பட இயக்குனராக பணியாற்றிய போது நடிகை விஜயலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் சீமான் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார் நடிகை விஜயலட்சுமி.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருடைய கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து வளசரவாக்கம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதையும் படிங்க: சீமான் ஒரு சர்வாதிகாரி..! நாதகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி குற்றச்சாட்டு...!

நடிகை விஜயலட்சுமியிடம் ஆடியோ ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை சேகரித்த போலீசார், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த 24 ஆம் தேதி சீமானுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், அவர் வெளியூர் சென்று இருப்பதாக கூறி நான்கு வார காலம் ஆகும் என அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து சீமான் வீட்டு வாசலில் சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. போலீசார் ஒட்டிய சம்மனை சீமான் வீட்டு பணியாளர்கள் கிழித்து எறிந்தனர்.

இதன் பேரில் சீமான் வீட்டில் காவலாளியாக பணியாற்றி வரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அமல்ராஜ் மற்றும் பணியாளர் ஒருவரையும் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனிடையே கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளியும், பணியாளரையும் சோழிங்கநல்லூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிபதி கார்த்திகேயன் இருவரையும், வருகிற 13-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.இதனையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: பழிவாங்க பெண் வழக்கறிஞர் எடுத்த அஸ்திரம்… தூள் தூளாக்கிய இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ்