சீமான் வீட்டிற்குள் நுழைது காவலாளியை போலீசர் கைது செய்து அழைத்துச் செல்லும்போது காவல்துறை ஆய்வாளரிடம் மன்னிப்பு கேட்டார் சீமானின் மனைவி கயல்விழி. தற்போது நீலாங்கரை காவல்நிலையத்தில் சீமானின் உதவியாளர் சுபாகர் நாயுடு, காவலாளி அமல்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை விஜயலட்சு அளித்திருந்த பாலியல் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு சீமானுக்கு போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். அவர் வீட்டில் இல்லாததால், ' சீமான் நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்'' என அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் சம்மன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. சீமான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், சீமான் ஆஜராக 4 வாரம் அவகாசம் வேண்டும் எனக் கடிதம் அளித்து இருந்தார். இந்நிலையில், வளசரவாக்கம், நீலாங்கரையில் உள்ள சீமானின் வளசரவாக்கம் வீட்டில் ஒட்டப்பட்டிருந்த சம்மனை போலீஸார் முன்பே உதவியாளர் சுபாகர் கிழித்து எறிந்தார்.
இதையும் படிங்க: ஆவேசமாக உள்ளே புகுந்த இன்ஸ்பெக்டர்..! பளிச் பளிச் என அறை..! கைது செய்யப்பட்ட சீமான் காவலர்..!

இதுகுறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இருந்து நீலாங்கரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சீமானின் நீலாங்கரை வீட்டிற்கு வந்து காவல்துறை ஆய்வாளார், கேட்டைத் திரந்து உள்ளே சென்று காவலாளி அமர்ல்ராஜை கைது செய்ய முயன்றார். அப்போது போலீஸாருக்கும், காவலாளி அமல்ராஜுக்கும் அடிதடி சண்டை ஏற்பட்டது. இதனையடுத்து உதவியாளர் அமல்ராஜை தரதரவென இழுத்துச் சென்று வேனில் ஏற்றினர். அப்போது காவலாளி அமல்ராஜ் துப்பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதனை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அவரிடம் இருந்து பற்றினர்.

அப்போது அங்கே வந்த சீமானின் மனைவி கயல்விழி, போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு காவலாளி அமல்ராஜை அழைத்துச் செல்லும் விதத்தைப் பார்த்து மிரண்டு போன கயல்விழி, காவல்துறை ஆய்வாளரிடம், ''நான் சாரி கேட்டுக்கிறேன். ப்ளீஸ்… ப்ளீஸ்...'' எனக் கெஞ்சினார். அதற்கு கோபத்துடன் காவல்துறை ஆய்வாளர், கோபமாக ''என்னா சாரி..?' என சொல்லி விட்டுச் சென்றார்.

தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஏற்பட்டு சுமார் 15 நிமிட போராட்டங்களுக்குப் பிறகு காவலாளி அமல்ராஜை போலீஸார் நீலாங்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதேபோல், வளசரவாக்கத்தில் சம்மனை கிழித்த சுபாகரையும் நீலாங்கரை காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்து வந்துள்ளனர். நீலாங்கரை காவல் நிலையத்தில் அவர்கள் இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இது ஒருபுறமிருக்க, '' காவலாளி அமல்ராஜ் தவறேதும் செய்யவில்லை. காவல்துறையினர் அத்துமீறி வீட்டுக்குள்ளே நுழைந்ததை அவர் தடுத்ததாகவும், காவல்துறையினர்தான் காவலாளியை தாக்கியதாகவும், அது தொடர்பான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் நீலாங்கரை காவல் நிலையத்தின் முன் சீமான் தரப்பின் வழக்கறிஞர்கள் குவிந்துள்ளனர்.

அதேபோல் காவலாளி அமல் ராஜிடம் ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த துப்பாக்கியை வைத்து அமல்ராஜ் காவல்துறையினரை மிரட்டியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தான் வழக்கு பதிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், காவலாளி அமல்ராஜ் வைத்திருந்த துப்பாக்கிக்கு உரிமம் உள்ளது. அவர் ஒரு முன்னாள் ராணுவ படை வீரர். பல ஆண்டுகளாக உரிமம் பெற்றி துப்பாக்கி வைத்திருக்கிறார். பல ஆண்டுகளாக சீமான் வீட்டில் அவர் காவலாளியாக இருந்து வருகிறார். அவர் வைத்திருக்கக்கூடிய துப்பாக்கிக்கு உரிமங்கள் உள்ளதாகவும் கூறி பத்துக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் பிரிவு தற்போது நீலாங்கரை காவல் நிலையத்திற்கு முன்பாக குவிந்துள்ளனர்.

இந்த நிலையில் காவல் நிலையத்திற்கு முன் இரண்டு நுழைவு வாயில்களிலும் பேரிகார்டர்கள் போட்டு தடுப்புகள் அமைத்து உள்ளே யாரும் நுழைய விடாமல் தடுத்து வைத்துள்ளனர். வழக்கறிஞர்கள் இருக்கக்கூடிய இடத்தில் அவர்களை காவல்துறையினர் சூழ்ந்து நிற்கின்றனர். காவல் நிலையத்திலிருந்து வரக்கூடிய காவலர்கள் தடுப்புகளை தாண்டி வெளியே வரக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியினரோ, பொதுமக்களோ யாரும் காவல் நிலையத்திற்கு செல்லாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீமான் வீட்டில் சம்மன் கிழிப்பு..! துப்பாக்கியுடன் நின்ற உதவியாளர்... போலீஸாருடன் அடிதடி- ஆடிப்போன கயல்விழி..!