தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தொகுதி மறுவரை தொடர்பான முதல் கூட்டு நடவடிக்கை கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சென்னை விமான நிலையம் வந்தார்.
அவரை தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, எம்.பி எம்.எம்.அப்துல்லா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, இன்று நடைபெறுகிற கூட்டம் கூட்டாட்சி தத்துவத்தையும் மாநில உரிமைகளையும் பாதுகாக்கின்ற வரலாற்று சிறப்புமிக்க கூட்டம் என்றார்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தை சட்டத்தை பாதுகாக்க கூடிய கூட்டம் இது. நாங்கள் (தென் மாநிலங்கள்) குடும்ப கட்டுப்பாட்டை முழுமையாக நிறைவேற்றிய மாநிலம். இப்படிப்பட்ட மாநிலங்களுக்கு தண்டனை கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
இதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார் செல்வப்பெருந்தகை. மேலும் அவர் பேசுகையில், ஒரு சாரருக்கு தொகுதியில் உயர்த்துவது ஒரு சாரருக்கு தொகுதியை குறைப்பது என்பதை அனுமதிக்க முடியாது. மத்திய அரசு தென் இந்தியா இல்லாமல் ஆட்சி செய்ய பார்கிறது. இது கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது என்றார்.
இதையும் படிங்க: அதை நாங்கதான் செய்யணும்.. நீங்க ஏன் போராடுறீங்க அண்ணாமலை..? சீமான் சுளீர் கேள்வி.!

அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாத்து விடுவார்கள் என்ற பயத்தில் ஆர்.எஸ்.எஸ் தீட்டி கொடுக்கக் கூடிய திட்டத்தை பாஜக அமல்படுத்த முயற்சி செய்யப் பார்க்கிறது. எம்பிகள் குறித்து அவதூறாக பேசிய தர்மேந்திர பிரதானுக்கு எதிராக ஏன் பாஜக தலைவர்கள் கருப்புக்கொடி காட்ட வில்லை.? நூறாண்டுகள் காணாத மழை பெய்த போது நிதி ஒதுக்காததை கண்டித்து ஏன் போராடவில்லை.? தமிழ்நாட்டு நலனுக்காக போராடாத பாஜக தமிழ்நாட்டு உரிமைக்காக கூடி பேசுவதை கண்டித்து கருப்புக்கொடி காட்டுவதா? என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார்

அதைத் தொடர்ந்து பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், முதலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் முதல் படியை முன்னெடுத்து உள்ளோம். இதில் நாங்கள் பெருமையாக கொள்கிறோம். நான் எப்போதும் செல்வது தான் அரசியல் கட்டமைப்பை நாங்கள் பாதுகாப்போம். ஒன்றாக சேர்ந்திருப்பது தொடக்கம் தான்.

இன்று அனைவரும் முன்னெடுப்பு குறித்து கலந்தாலோசித்து, ஒன்றாக சேர்ந்து வெற்றியை நோக்கி பயணிப்போம். தெலுங்கானா, கேரளா,கர்நாடக என அனைவரும் இங்கு இணைந்துள்ளோம். பாஜக போராட்டத்தை வரவேற்கிறேன், அண்ணாமலை கர்நாடகவில் வேலை பார்த்தவர் அவருக்கு எங்கள் வலிமை தெரியும் என்று கூறினார்.
இதையும் படிங்க: தைரியம் இருந்தா என்னை கைது பண்ணுங்க... ஸ்டாலினுக்கு சவால் விட்ட அண்ணாமலை!!